அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

இந்த பழமொழியில் அரண்டவன் என்பவன் பேய் பயத்தில் இருப்பவன். பல பேய் கதைகளை கேட்டு மனதில் பயத்துடன் இருப்பான். அதனால் அவன் இருட்டில் நடக்கும்போது எதைப் பார்த்தாலும் பேய் என்று பயப்படுவான்.

நாம் இதை பல இடங்களில் உபயோகப்படுத்துகின்றோம். உதாரணத்திற்கு, உங்கள் நண்பன் ஒரு விஷயத்தில் பலமுறை பலரிடம் ஏமார்ந்துபோய் இருக்கிறான் என்றால், அவன் மனதில் அனைவரும் கெட்டவர்கள் என்ற எண்ணம் ஆழமாக பதிந்து இருக்கும். அனைவரையும் தவறாக எடை போட்டு வைத்திருப்பான்.

அதனால் உங்களை கூட நம்பாமல் சந்தேகப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த நேரத்தில் நீங்கள் சொல்வீர்கள் “டேய்! என்ன போய் சந்தேகபடுறியே டா! அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் டா !” என்று.

Subscribe
Notify of
help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.