நா நெகிழ் வாக்கியங்கள் பகுதி-2 (Tamil Tongue Twisters Part-2)

நா நெகிழ் வாக்கியங்கள் பகுதி ஒன்றைப் படிக்க இங்கு சொடுக்கவும்.

dogs-twisting-tongue
Credit:Flickr

மேலும் ஒரு நா நெகிழ் பயிற்சி. நானே யோசித்துத் தயாரித்தது. என்னுடைய ஒவ்வொரு பதிவிலும் இயன்ற அளவு சமூக சீர்திருத்தக் கருத்துக்களை கூற விழைகிறேன். அவ்வண்ணமே, இங்கும் ஒவ்வொரு வாக்கியத்திலும் கருத்துக்கள் பொதிந்துள்ளன. அவைகள் புரியவில்லையென்றாலோ அல்லது முரண்பாடாகத் தெரிந்தாலோ என்னிடம் வினவ அன்பு அழைப்பு விடுக்கிறேன்.

  1. கேடு கெட்ட உறவோடு கெட்ட மட்ட கருவாடு, கொண்டு வரும் வறுவோடு எடுக்க வைக்கும் திருவோடு.
  2. எக்கினாலும் விக்கினாலும் ஏசும் இந்த உலகம், சொக்கினாலும் துக்கினாலும் பழிக்கும் பாவ உலகம், நிமிர்ந்து நேர்மை பூண்டு செல்வோம் பரலோகம்.
  3. நேசம் இல்லா இடத்திலே நாசம் என்றும் உள்ளதப்பா, ஆசையில்லா இல்லா இடத்திலே பூசையொன்றும் இல்லையப்பா, பாசம் உள்ள இடத்தினிலே வாசம் கொள்ளல் நல்லதப்பா.
  4. கட முட மாட்டு வண்டி தட தட வென உருண்டு போயி மட மட வென கழுன்றதென்றால் பட பட வென நெஞ்சம் பதறாதோ.
  5. கஞ்சி ஊத்த ஆள் இல்லன்னாலும் கட்சி கட்ட ஆளு வேணும்னு கெஞ்சிப் பேச வாஞ்சித்த வஞ்சியை மிஞ்சிய பிஞ்சுநெஞ்சு கொஞ்சியழைத்தது.
  6. உனக்கும் எனக்கும், பிறர்க்கும் உனக்கும், எனக்கும் பிறர்க்கும், அவர்க்கும் நமக்கும், இவர்க்கும் அவர்க்கும், பெரிதான பிரதான ஒற்றுமை மானிடப் பிறவியே.
  7. தள தள மாமியின் வழ கொழ பேச்சைக் கேட்டு தட புடலாய் செலவு செய்து வழக்கத்துக்கு மாறான பழக்கத்தைப் புழக்கத்தில் கொண்டு வாழும் வாழ்க்கை வழுவியும் வேண்டாமே.
  8. குட்டக் குட்டக் குனியாதே, கட்டுப் பட்டுத் தொலையாதே. திட்ட வட்ட நெஞ்சுடனே விட்டுக் கொடுத்து வாழ்ந்து வெட்ட வெட்டத் துளிர்த்திடு.
  9. தொடை தட்டி சவால் விட்டு, வடை சுட்டுக் கடை போட்டு விற்று, தடை நீங்க விடை கிடைத்து, புடை சூழ குடை பிடித்து நடைபோட்டு போனபோது, பீடை மோத பாடையில் சென்றான்.
  10. வட்டம் பெரிய வட்டம், கட்டம் சிறிய கட்டம். கட்டம் போடுது கொட்டம், வட்டம் போடுது சட்டம். வட்டம் இல்லை கட்டம், கட்டம் இல்லை வட்டம். வட்டம் வட்டம், கட்டம் கட்டம், இது திட்டவட்டம்.

தொடரும்…

Subscribe
Notify of
help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
guest
10 Comments
Inline Feedbacks
View all comments
திண்டுக்கல் தனபாலன்
ஏப்ரல் 11, 2014 4:57 மணி

சிலது சவால் தான்… தொடர்கிறேன்…

வெங்கட் நாகராஜ்
ஏப்ரல் 12, 2014 3:08 காலை

படிக்கும் போதே சில கடினமாக இருக்கிறது! 🙂 tongue twisters … literally!

தொடர்கிறேன்.

Jeevalingam Kasirajalingam
ஏப்ரல் 12, 2014 2:29 மணி

கொஞ்சும் தமிழில்
விஞ்சும் நடையி்ல்
அள்ளித் தந்த
அருமையான பத்தடிகளை
சுவைத்துப் படிக்க முடிந்ததே!

Iniya
ஏப்ரல் 14, 2014 3:19 காலை

நன்றாகவே உள்ளது தொடர்கிறேன்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்….!

அம்பாளடியாள் வலைத்தளம்
ஏப்ரல் 14, 2014 4:50 காலை

வணக்கம் சகோதரா !
இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் .இன்றுதான் தங்களின் தளத்தினை அறிந்துகொண்டேன் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் .வாருங்கள் என் தளத்திற்கும் என்றும் இனிய தமிழோடு இணைந்திருப்போம் .

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.