Tag: இயற்கை

கூடாத எலும்பையும் கூட வைக்கும் கல்லத்தி

ஒரு வருடத்திற்கு முன்பு எங்கள் ஊர் காட்டில் உள்ள கிளாநீர் பற்றியும் அங்கு உள்ள பல பழங்கள் பற்றியும் எழுதியிருந்தேன். அவைகள் நான் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. படிக்காதவர்கள் படித்துத் தங்களது கருத்தைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். வருகையாளர்களின் அன்பு …

இறைவனின் இன்பப் படைப்பினிலே – கவிதை

இறைவனின் இன்பப் படைப்பினிலே இனிமை எல்லாம் இருக்குது ! இதய வானில் மிதந்து வந்து இன்னிசை இனிதே பாடுது ! எத்தனை அழகு என்று என் இதயம் எண்ணி மகிழுது! இதய வாசல் திறந்து வைத்து வரவேற்பு அளிக்கச் சொல்லுது! …

சிற்றுலா (Picnic) – உண்மைச் சிறுகதை

குறிப்பு: இந்தக் கதை உண்மைக் கதையாதலால், உண்மையான ஊர் மற்றும் மக்கள் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளேன். மேலும், இதில் நிறைய கிறிஸ்துவப் பெயர்களும், கலைச் சொற்களும் இடம் பெற்றுள்ளன. எனவே, புரியாதவர்கள் பின்னூட்டமிடவும். சில முக்கிய கலைச் சொற்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. …

அணில் பாட்டு – கவிதை

அணிலே! அணிலே! அழகு அணிலே! அக்கம் பக்கம் பார்த்துப் பார்த்து வேகமாய் ஓடும் விரைவு அணிலே! அனைவரும் அன்பாய் அழைக்கும் நல்ல அருமை அணில்பிள்ளை நீதானே! கிளைக்கும் இலைக்கும் வலிக்காமல் வெகுவிரைவாய் தாண்டிடும் அறிவே! வாலை நிமிர்த்தி ஓடும் விவேகியே! …

எங்கள் வீட்டுப் பட்டு

பட்டுப் பட்டாம்பூச்சி பறந்து பறந்து போச்சி. பூவுக்குப் பூவு தாவி தேனை குடிக்கலாச்சி. கண்கள் ரசிக்கலாச்சி என் மனமும் மயங்கலாச்சி. கால்கள் தேடித் தேடி அதனைப் பிடிக்கப் போச்சி. நான் ஓடி ஓடிப் போக ஆடுது கண்ணா மூச்சி. நானும் …

விவசாயம் – உழவர் திருநாள் சிறப்புக் கவிதை

மூச்சே உயிர்க்கு ஆதாரம் அழகு இயற்கைக்கு ஆதாரம் குளிர்காற்று மழைக்கு ஆதாரம் பயிரே உணவுக்கு ஆதாரம் பயிர் இல்லையேல் ஆகும் உயிர் சேதாரம். வாழ்க்கைக்கு பணம் அச்சாணி உயர்வுக்கு உழைப்பு அச்சாணி நட்புக்கு நம்பிக்கை அச்சாணி தூய்மைக்கு வாய்மை அச்சாணி …

நாம் அறிந்த பழங்களும் அழிந்துவரும் பழங்களும்

இந்தக் கட்டுரையில் நாம் அறிந்த பழங்களின் பட்டியலையும் கேள்விப்படாத அழிந்துபோகும் அரிய வகை பழங்களையும் பார்க்கப்போகிறோம். நாம் அறிந்த பழங்களின் பட்டியல் முக்கனிகள் மா, பலா மற்றும் வாழை. பிற பழங்கள் அன்னாசி செடி காய்களுடன்   • ஆப்பிள்• …

இயற்கையைப் பார் – கவிதை

கண்ணுக்கு விருந்தாக களிப்பூட்டும் காவியமாக சிந்திக்க வைக்கும் சித்திரமாக சித்தரிக்கும் கலை அழகாக படைப்பின் இலக்கணமாக படைப்பாளிகளின் பக்கத் துணையாக உணர்வுக்கு ஒரு வசந்தமாக உயிர்களுக்கு உறைவிடமாக பசுமை எழிலின் துள்ளலாக பார்ப்பவர்களுக்குக் கொடை வள்ளலாக இறைவனின் வண்ண ஓவியமாக …

மரத்தின் சிறப்பினை அறிவோம்

மரமே! நாங்கள் உன்னை வளர்க்கிறோம்; நீ எங்களுக்காகவே வளர்கிறாய். பூமியிலிருந்து சத்துக்களை உறுஞ்சுகிறாய்; நன்றிக்கடனாக வெள்ளத்தின் போதும் புயலின் போதும் மண்ணரிப்பைத் தடுக்கிறாய். நாங்கள் தண்ணீர் ஊற்றுகிறோம்; கைம்மாறாக எங்களுக்குக் காய் கனிகளைத் தருகிறாய். நன்றிமறவா பிறவியே! உன்னை வெட்டுபவர்களைக் …

ஆவாரைப் பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா

“பாட்டி! பாட்டி! என்ன பண்ற?” என்று வரப்பு ஓரமாக ஏதோ பறித்துக் கொண்டிருந்த தனது பாட்டியைப் பார்த்து கேட்டான் சிறுவன் மணி. “ஆவாரந் தழைப் பறிக்கிறேன்டா செல்லம்” என்றார் பாட்டி. “எதுக்கு?” வினவினான் மணி. “உன் கூட்டாளி சுமிதாவுக்கு கையில …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.