நடுநாட்டுச் சொற்களின் தொகுப்பு

நடுநாட்டுச் சொற்கள்: தென்னாற்காடு மாவட்ட வட்டார வழக்குச் சொற்கள்

வட்டார வழக்குச் சொற்கள் தமிழின் தொன்மையையும் செம்மையையும் மக்களுடைய பண்பாட்டையும் காட்டுகின்றன. பெரும்பாலும் அவை தூய தமிழ்ச் சொற்களாக உள்ளன.  இக்காலத்தில் வட்டார வழக்கில் பேசுவது வெகுவாகக் குறைந்து விட்டது. எனவே, அவற்றைக் காப்பதும் அவைகளை இணையதளங்களில் பதிவு செய்வதும் மிகவும் அவசியமாகிறது. இவைகள் தமிழ் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தென்னாற்காடு மாவட்டம் பழைய விழுப்புரம் கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கியது. தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் விழுப்புரத்திலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறது. சென்னைத் தமிழ், நெல்லை தமிழ், குமரித்தமிழ், தஞ்சை தமிழ், கொங்குத்தமிழ் என்று ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வழக்கு இருப்பது போல், தென்னாற்காடு மாவட்டத்திற்கும் வட்டார வழக்குச் சொற்கள் இருக்கின்றன. தென்னாற்காடு மாவட்ட தமிழ் பொதுவாக நடுநாட்டுத் தமிழ் என்று அழைக்கப்படுகிறது. நடுநாட்டுத் தமிழ் சொற்கள் சிலவற்றை இந்தப் பதிவில் காண இருக்கிறோம். நீங்களும் உங்களுக்குத் தெரிந்த நடுநாட்டுச் சொற்களைச் சேர்க்கலாம். 

சில தென்னாற்காடு (நடுநாட்டு) வட்டார வழக்குச் சொற்களும் அதன் பொருள்களும்

There are currently 10 நடுநாட்டுச் சொற்கள் in this directory beginning with the letter ந.

நமோது
பெயரளவு (formality)

நாக்குப்பூச்சி
மண்புழு

நாள் முட்டும்
நாள் முழுவதும்

நீனு
நீ

நீலகிரி மரம்
யுக்கலிப்டஸ் மரம்

நெட்டாரல்
மழைத்தூரல் தொடர்ந்து விட்டு விட்டுப் பெய்துகொண்டே இருத்தல்

நெண்டி விடுதல்
ஒருவருக்கு எதிராக வேறொருவரைத் தூண்டி விடுதல், பழைய பிரச்சனையைக் கிளரி மனவேதனைப் படுத்துதல்

நெவ்வாக அரைத்தல்
மாவை மிகவும் நுண்ணிய துகள்களாக அரைத்தல்

நோக்காடு
நோய் நொடியுடன் கூடிய நிலை

நோஞ்சான்
பலவீனமானவன்


Submit a நடுநாட்டுச் சொல்

Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading