எனக்கு பிடித்த பக்திப் பாடல்

Jesus
இயேசு ஓவியம்

பின்வரும் கிறுஸ்துவ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும்போது காப்பது நீயே நிரந்தரம்
செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலைவாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்
அதன் நிலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்.

இது கிறுஸ்துவ பாடலாக இருந்தாலும் அனைத்து மதத்திற்கும் பொருந்தும். வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை.கடவுள் ஒருவரே எப்போதும் நிரந்தரம்.அவர் மீது பற்றுகொண்டு வாழ்ந்தால் மட்டுமே நமக்கு நிலை வாழ்வு(சொர்க்கம்) கிடைக்கும் என்னும் உயரிய கருத்தை இந்த பாடல் வலியுறுத்துகின்றது.
இந்த பாடல் பல பள்ளிகளில் இறைவணக்கப் பாடலாக உள்ளது.இந்து பள்ளிகளில் கூட.எந்த காலத்திலும் எப்போதும் வாழ்கையில் உபயோகமான இந்த பாடலை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

Subscribe
Notify of
help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.