என் ஆசிரியர் ஒருவர் சொன்ன கருத்துக்கள் இன்னும் என் மனதில் பதிந்து இருக்கின்றன. மேலும் என் வாழ்கையில் சில சமயங்களில் உதவியாகவும் இருக்கின்றன. அதை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்தக் கருத்துக்களுக்கு “விதியாவது சதியாவது” என்னும் தலைப்பைக் கொடுக்கிறேன்.
நாம் நேர்மையாக வாழும்போது கடவுள் அனைத்தையும் நமது நன்மைக்காகத்தான் செய்வார் என்று நம்பணும். இந்தக் கருத்து பிடித்தாலும் சரி பிடிக்கலனாலும் சரி, ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும்.
துன்பத்தைக்கண்டு துவளக் கூடாது. இன்பத்தைக்கண்டு துள்ளிக் குதிக்கக் கூடாது.
நேர்மறையான எண்ணம் வேண்டும். வாழ்க்கை என்பது ரோஜா பூக்கள் நிறைந்த மெத்தையல்ல.
நமது வாழ்க்கை ஒரு ரோஜா செடியைப் போன்றது. சாதிக்க விரும்பினால் முள்ளைத் தவிர்த்து மலர்களை மட்டும் பறிக்க வேண்டும்.
துன்பங்களைப் பார்த்து முள் குத்துகிறதே என்று ஒதுங்கினால் ரோஜாப்பூ எப்படி நமது கைக்கு வரும்?
நம் வாழ்வில் ஒரு அர்த்தம் இருக்கணும். நாம் தூங்கப்போகும் முன் அன்றைய தினத்தின் நிகழ்வுகளை மற்றும் நமது செயல்களைத் திரும்ப யோசித்துப் பார்த்தால், நமது குறை நிறைகள் தெரியும். குறைகளைக் குறித்து வைத்துக்கொண்டு படிப்படியாகத் திருத்திக்கொள்வது நல்லது.
ஒன்று மட்டும் மனசுல நெரந்தரமா வச்சிக்கணும். நமது முன்னேற்றமும் சரி, மகிழ்ச்சியும் சரி, அடுத்தவர்களை அடமானம் வைத்துப் பெறுவதாக இருக்கக் கூடாது (Never at the cost of others).
கடவுள் நம்பிக்கை என்ற அஸ்திவாரத்தோடு, உண்மை, உழைப்பு மற்றும் நேர்மை என்பவைகளான ஜல்லி, சிமெண்ட்டு மற்றும் செங்கற்களுடன், மனித நேயம் என்னும் நீரைப் பயன்படுத்தி, வாழ்க்கை என்னும் வீட்டைக் கட்டினால் விதியாவது சதியாவது, பரகதி என்னும் சொர்க்கத்தை அடைய முடியும். மகாத்மா நமக்குள் இருக்கும். மனிதப்பிறவி எடுத்ததின் அர்த்தமும் விளங்கும்.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
அருமையான கருத்தை
அற்புதமாகச் சொல்லிப்போகிறீர்கள்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்