திருக்குறள்-நீத்தார் பெருமை,அறத்துப்பால் மூன்றாம் அதிகாரம்

1.ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

சான்றோர் நூலில் விருப்பமுடனும் உயர்வாகவும் ஒழுக்கத்தில் சிறந்த பெரியோர்களில் பெருமை இடம்பெறும்.

2.துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

உலகில் இறந்தவர்களை கணக்கிடுவது கடினம்.அதுபோல ஆசை மற்றும் பற்றுகளை துறந்த ஒழுக்கமுடையவர்களின் பெருமைகளை அளவிட முடியாது.

3.இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

இருமை என்பது நன்மை மற்றும் தீமை ஆகும்.அந்த இருமையை ஆராய்ந்து அதாவது நன்மை எது தீமை எது என ஆராய்ந்து தர்மம் செய்து வாழ்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவர்.

4.உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

உறுதியை அங்குசமாகக் கொண்டு தனது அம்பொறிகளையும் அடக்கி காப்பவன் துறவறம் என்னும் நிலத்தில் பயன் தரக்கூடிய நல்ல விதைக்கு ஒப்பாவான்.

5.ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

புலன்களை அடக்காமல் வழிதவறி சென்றவன் இந்திரன்.அதனால் தனது அம்புலங்களையும் அடக்கி வாழும் சான்றோரின் புகழ் மற்றும் ஆற்றலை எடுத்துக் காட்டும் ஒரு சான்றாக விளங்குகிறான்.

6.செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

பெருமை தரும் செயல்களை செய்வோரே பெரியவர்.அவ்வாறு செய்யாதவர் சிறியோர் ஆவர்.இவ்வாறு நாம் எளிதாக வகைப் படுத்தலாம்.

7.சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

ஐம்புலங்களின் தன்மையை உணர்ந்து அதனை அடக்கி வாழும் திறன் கொண்டவர்களையே உலகம் போற்றும்.

8.நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

சான்றோர்கள் எழுதிய அறவழி நூல்கள் இந்த உலகில் அழியாமல் நிற்கும்.அவைகளே அவர்களின் பெருமையை எடுத்துக்காட்டும்.

9.குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

குணசீலர்கள் கோபம் கொண்டால் அந்த கோபம் அவர்கள் உள்ளத்தில் சிறு கணம் கூட நிலைத்து நிற்காது.

30.அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

அந்தணர் குலத்தில் பிறந்தவர்கள் மட்டுமே அந்தணர்கள் அல்லர்.இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களிடமும் அன்பு கொண்டு அருள் பொழியும் அனைவரும் அந்தணர்கள் என்றே அழைக்கப்படுவர்.

Subscribe
Notify of
help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.