நாம் சிரிக்கும் நாளே திருநாள்

fireworks-பட்டாசு

பாவத்தில் பிறந்து பாவத்திலே வளர்ந்து

பாவமூட்டை சுமந்து பரகதி சேர

பதற்றமாய் வாழும் பாவி மானிடா!

பள பளப்பாய் தெரியுதா வாழ்க்கை?

மாயையான உலகில் நீ ஒரு நடிகனடா.

பிறந்தேன் வளர்ந்தேன் வாழ்ந்தேன்

டா… டா… போகிறேன் என்கிறாயா?

நீ பிறந்தது வீணிலும் வீணடா.

யார் வாழ்ந்தால் எனக்கென்ன?

நான் வாழ்கிறேன் என நகைக்கிறாயா?

முன்னவனைவிட நீ மிக மோசமடா.

நீ பதுமை பூமிக்கு தண்டமடா.

பிறர் வாழ்வதைப் பார்த்து குமுறுகிறாயா?

உன் எரிமலைக் கண்களால் சுடுகிறாயா?

நீயொரு கொலை பாதகனடா.

பிறரை சுரண்டி நிதம் வாழ்கிறாயா?

அடே! நீ பூமிக்கு பாரமடா.

பிறர் சிறக்க தான் மகிழ்ந்து

காக்கைப்போல் பலர்க்கும் பகிர்ந்து

நிறைவானவனை நிதம் நினைத்து

வாழ்வின் பொருளுணர்ந்து வாழ்ந்து

நிம்மதி மூச்சு என்ற சைவ சிரிப்பை

நாம் உதிர்த்து வாழும் நன்னாட்களே

நண்பா! நாம் கொண்டாடும் திருநாளடா!

Subscribe
Notify of
help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
guest
13 Comments
Inline Feedbacks
View all comments
Rupan
அக்டோபர் 15, 2013 3:26 காலை

வணக்கம்

கவிதையின் வரிகள் நன்று வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன்
அக்டோபர் 15, 2013 3:30 காலை

அருமையான வரிகள்… கவிதையை நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்… நன்றி… போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்…

Ranjani Narayanan
அக்டோபர் 15, 2013 4:10 காலை

சைவ சிரிப்பா? புதிய சொல் பிரயோகம்! கொஞ்சம் விளக்க முடியுமா?
நீ பதுமை பூமிக்கு தண்டமடா – நீ ஒரு பதுமை என்று அர்த்தம் கொள்வதா? அல்லது பூமி ஒரு பதுமை என்று பொருள் கொள்வதா?
சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் இந்தக் கேள்விகள். மன்னிக்கவும்.

Ranjani Narayanan
அக்டோபர் 15, 2013 4:11 காலை

போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்!

Sasi Kala
அக்டோபர் 15, 2013 5:17 காலை

வாழ்வின் பொருளுணர்ந்து வாழ வேண்டும் என்பதை சொன்ன வரிகள் சிறப்பு. ரஞ்சனி அம்மாவின் கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் நானும் படித்து தெரிந்து கொள்வேன்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Ranjani Narayanan
அக்டோபர் 15, 2013 2:26 மணி

அலுவலகத்திலிருந்து வந்தவுடன், விளக்கம் எழுதியதற்கு பாராட்டுக்கள். அறிவுபூர்வமான விளக்கங்களுக்கு நன்றி, ரீகன் ஜோன்ஸ்.
போட்டியில் வெற்றி பெற மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.

Rupan
அக்டோபர் 16, 2013 7:33 காலை

வணக்கம்
உங்களின் கவிதை வந்து கிடைத்து விட்டது மிக மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு அறியத்தருகிறேன்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Iniya
நவம்பர் 5, 2013 4:07 காலை

அத்தனையும் நிஜம் நன்றாக இருந்தது. நன்றாக ரசித்தேன்.

தொடரவாழ்த்துக்கள் ….! போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்.

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.