திருவள்ளுவரைப் பற்றி

திருவள்ளுவர் திருக்குறளை எழுதியவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.உலகே வியந்து போற்றும் நூல்களில் முக்கியமான ஒன்று திருக்குறள்.எல்லா நாட்டவர்க்கும் இனம்,மதம்,மொழி மற்றும் கலாச்சாரம் அனைத்தையும் தாண்டி வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களை கூறுவதால் அது உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது.
Thiruvalluvar

திருவள்ளுவர் சென்னை மைலாப்பூரில் பிறந்தவர்.அவர் நெசவுத் தொழில் செய்து வந்தார் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.அவரது மனைவியின் பெயர் வாசுகி.அவரது தாய் தந்தையரை பற்றி சரியான தடயங்கள் கிடைக்கவில்லை.

அவர் கி.மு 31ம் ஆண்டு பிறந்தார்.தமிழ் அறிஞர்கள் வரலாற்றை தி.மு(திருவள்ளுவர் பிறப்பதற்கு முன்), தி.பி(திருவள்ளுவர் பிறப்பிற்கு பின்) என வரையறுக்கின்றனர்.திருக்குறளை இயற்றியதாலேயே அவருக்கு திருவள்ளுவர் என பெயர் வந்தது.ஆனால் அவரது உண்மையான பெயர் கண்டுபிடிக்கமுடியவில்லை.மேலும் அவருக்கு நாயனார்,தேவர்,தெய்வப்புலவர்,செந்நாப்போதர்,பெருநாவலர்,பொய்யில் புலவர்,பொய்யாமொழிப் புலவர் என பல புனைப் பெயர்கள் உண்டு.
வள்ளுவர்க்கென்று சென்னை மைலாப்பூரில் ஒரு கோவிலும்,வள்ளுவர் கோட்டமும் தற்போது உள்ளது.அவரை கவுரவிக்கும் விதத்தில் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் 133 அடியில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.
அவரைப் பற்றி நிறைய கதைகள் கூறுகின்றனர்.அவர் அன்னத்தை சிறு பருக்கை கூட வீணாக்கக்கூடாது என்ற கொள்கை உடையவர்.சாப்பிடும்போது சோற்றை சிந்தாமல் சாப்பிடுவார்.
மேலும் அவர் சிவன்-பார்வதி ஆனந்த தாண்டவத்தை கண்ட பாக்கியசாலி எனவும் கூறுகின்றனர்.
வள்ளுவன்-வாசுகி போல் வாழவேண்டும் என்றே பெரியவர்கள் திருமண தம்பதிகளை வாழ்த்துவார்கள்.அதற்கு காரணம் கணவனில் சரிபாதி மனைவி என்பதை உணர்ந்து வாழ்ந்தவர் திருவள்ளுவர்.ஒருமுறை வாசுகி கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க கயிற்றை இழுத்துக்கொண்டிருந்தார்.வாளி பாதி தூரத்தில் இருக்கும்போது அவரை அழைத்தாராம் வள்ளுவர்.வாசுகி கயிற்றை அப்படியே விட்டுவிட்டு ஓடோடி வந்தாராம்.அந்த அளவுக்கு கணவனின் சொல் பேச்சைக் கேட்பவர் வாசுகி.ஆனால் அந்த வாளியோ கிணற்றில் விழாமல் அப்படியே நின்றதாம்.கணவன்-மனைவி ஒற்றுமைக்கு இயற்கையே அடிமை என்பதற்காகவே இந்த கதை கூறப்படுகிறது.
திருவள்ளுவர் தனது திருக்குறளை மதுரை தமிழ் சங்கத்தில் அரங்கேற்றே பாண்டிய மன்னனின் அரசவைக்குக் சென்றார்.ஆனால் திருக்குறள் இலக்கணத்துக்கு மாறாக இரு அடிகளில் எழுத்தப்பட்டுள்ளதால் மன்னன் அரங்கேற்ற மறுத்துவிட்டான்.பின் ஔவையார் துணைகொண்டு அவரின் ஆதரவோடு திருவள்ளுவர் அதை அரங்கேற்றியதாகவும் கூறுவர்.
திருவள்ளுவர் ஆசானுக்கெல்லாம் ஆசான்.அவரது புகழ் உலகம் முடியும்வரை நிலைத்து நிற்கும் என்றால் அது மிகையல்ல.
Subscribe
Notify of
help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
தமிழ் பட பாடல் வரிகள்
செப்டம்பர் 2, 2012 4:07 காலை

அனைவருக்கும் பிடித்த சிறந்தத் தமிழ் படங்களின் பாடல் வரிகள்

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.