விவசாயம் – உழவர் திருநாள் சிறப்புக் கவிதை

நெல் வயல்

மூச்சே உயிர்க்கு ஆதாரம்

அழகு இயற்கைக்கு ஆதாரம்

குளிர்காற்று மழைக்கு ஆதாரம்

பயிரே உணவுக்கு ஆதாரம்

பயிர் இல்லையேல் ஆகும் உயிர் சேதாரம்.

வாழ்க்கைக்கு பணம் அச்சாணி

உயர்வுக்கு உழைப்பு அச்சாணி

நட்புக்கு நம்பிக்கை அச்சாணி

தூய்மைக்கு வாய்மை அச்சாணி

வாழ்விற்கு விவசாயம் அச்சாணி

மாந்தர்க்கு விவசாயி ஒரு கடையாணி.

விளைபொருள் பாங்காய் தருபவரே!

பழங்கள், காய், கிழங்குகள் அளிப்பவரே!

மக்களின் உயிரைக் காப்பவரே!

எங்களின் விருப்பத்தைக் கேளுங்களேன்!

நவீன உரங்களால் நிலம் மாசடைகிறதே

உண்ணும் உணவும் நஞ்சாகிறதே

மக்களின் ஆயுளும் குறைகிறதே.

இயற்கை உரங்கள் பலவுமிட்டே

வேம்பு இலுப்பை தெளிப்பான்களிட்டே

மனிதர் நூதன நோய்களின்றி

நலமாய் வாழ வகை செய்யலாமே!

நீ செய்யும் பசுமை புரட்சிதான் எங்களுக்குப் புகலிடம்

உலகம் உள்ளவரை உனக்குத்தான் முதலிடம்!



அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

One Response

  1. இராஜராஜேஸ்வரி ஜனவரி 14, 2013

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.