ஆசை

அப்துல் கலாம்

சொந்தத்தோடு சொர்க்கம் பார்க்க ஆசை

சொந்தத்தேவை துறந்துவிட ஆசை

சிட்டுபோலச் சிறகடிக்க ஆசை

சிறந்த படைப்பின் சிறப்பைச் சொல்ல ஆசை

கானம் பாடும் வானம்பாடி ஆக ஆசை

வானம் என்ன தூரம் எனக் காண ஆசை

கடலின் ஆழம் கண்டுபிடிக்க ஆசை

மடல் விரியும் பூப்படைத்த புனிதன் காண ஆசை

நானும் ஒரு அப்துல் கலாம் ஆக வேண்டும், ஆசை

நாடு போற்ற நானும் வாழ வேண்டும் ஆசை

இயற்கை எழிலை ரசிக்க நல்ல ஆசை

இறைவன் புகழைப் பாட வெல்ல ஆசை

கொஞ்சும் மழலையாக நானும் மாற ஆசை

கெஞ்சும் வர்க்கம் ஒழிய வேண்டும் ஆசை

பிஞ்சு உள்ளம் கொண்டு நன்று வாழ ஆசை

நஞ்சு மனம் கொன்று வென்று வாழ ஆசை

3 Comments

    • மரிய ரீகன் ஜோன்ஸ் பிப்ரவரி 12, 2013

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.