அணில் பாட்டு – கவிதை

அணில்

அணிலே! அணிலே! அழகு அணிலே!

அக்கம் பக்கம் பார்த்துப் பார்த்து

வேகமாய் ஓடும் விரைவு அணிலே!

அனைவரும் அன்பாய் அழைக்கும் நல்ல

அருமை அணில்பிள்ளை நீதானே!

கிளைக்கும் இலைக்கும் வலிக்காமல்

வெகுவிரைவாய் தாண்டிடும் அறிவே!

வாலை நிமிர்த்தி ஓடும் விவேகியே!

ஆல அரச மரங்களிலே

ஆடி ஓடிப் பழங்கள் உண்டு

கொட்டைகளைக் கொரித்துத் தின்று

கொஞ்சி மிஞ்சி விளையாடி

ஆனந்த வாழ்க்கை அனுபவித்து

மரத்தில் மஞ்சம் கொள்ளும் அணிலே!

பார்த்தால் நீ கண்ணுக்கினிய நல்ல பிராணி.

பழகினால் நீ எங்கள் அன்பு செல்லப் பிராணி.

நெஞ்சில் நிறையும் பிள்ளை அணிலே!

உன் சுறுசுறுப்பை களித்துக் கண்டவர்

வாழ்வில் சோம்பித் துஞ்சமாட்டார்.

சோகத்தைச் சுவைக்காத சுட்டிச் செல்லமே!

சொல்லித்தருவாயா மகிழ்வின் ரகசியத்தை?

மனிதர் மனங்களில் உள்ள மாசுகளை

அறவே போக்க அன்பன் எனக்கு

அன்பாய் ஒரு வழி சொல்லேன்.

One Response

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.