புதிய ஆத்திச் சூடி 2013 1

புதிய ஆத்திச் சூடி 2013

ஔவை நான் ஒரு புலவர் ஆக முடிவெடுத்துவிட்டேன். அதனுடைய தொடக்கம்தான் இது. ஆத்திச் சூடி போன்று ஒரு பாடல் எழுதலாம் என்று முயன்றிருக்கிறேன். ஓசைகள் சரியாக அமையவில்லை என்றாலும், கூற வரும் கருத்தைக் கவனிக்கவும்.

  1. ன்புடன் அணுகு
  2. ணவம் அகற்று
  3. ரவல் விலக்கு
  4. தல் ஒதுக்கேல்
  5. றுதியே துணை
  6. னத்தை இகழேல்
  7. ள்ளி நகையேல்
  8. ளனம் பேசேல்
  9. ம்புலன் அடக்கு
  10. ஒன்றே இறைவன்
  11. ரம் போகேல்
  12. வை சொல் கேள்
  13. தும் இதும் மேல்.

அர்த்தங்கள்

படித்ததுமே புரிந்திருக்கும். இருந்தாலும் விளக்கவேண்டியது என் கடமை.

1. அன்புடன் அணுகு – எந்த ஒரு செயலையும் ரசித்து அதனைச் செய்ய வேண்டும். பிறரிடம் பழகும்போது ஒவ்வொரு முறை அவர்களை அணுகும்போது அன்போடும் பாசத்தோடும் அணுகினால் ஊரில் உள்ள அனைவருமே நமக்கு எப்போதும் நண்பர்களாக இருப்பர்.

2. ஆணவம் அகற்று – செருக்கு, அதாவது ஆணவம்தான் ஒருவனுக்கு அழிவை ஏற்படுத்தும் நோய். அதனைக் கைவிட்டால் நம் பெயர் இந்த உலகம் அழியும் வரை இருக்கும்.

3. இரவல் விலக்கு – கடன் வாங்கக் கூடாது. ‘கடன் அன்பை முறிக்கும்’ என்பார்கள். மேலும் கடன் வாங்குவதால் பல பிரச்சினைகள் வருகின்றன. உதாரணத்திற்கு ஒரு ஏழைப் பெண்மணி ஒருவளிடம் நகை இரவல் வாங்கி ஒரு திருமணத்திற்கு அணிந்து செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒருவேளை அதை அவர் தொலைத்துவிட்டால் ஏழையான அவர் எப்படி அதனை நகைக்குச் சொந்தக்காரரிடம் கொடுப்பார்?

4. ஈதல் ஒதுக்கேல் – நாம் செய்யும் தர்மம்தான் நாம் சாகும் வரை நம் கூடவே வரும். எனவே தர்மம் செய்வதை ஒதுக்கவே கூடாது.

5. உறுதியே துணை – மனதில் உறுதி வேண்டும். உறுதியோடு செய்யும் செயல் ஒவ்வொன்றும் வெற்றியடையும். உறுதிதான் நமது வாழ்க்கைக்குத் துணை.

6. ஊனத்தை இகழேல் – ஒரு ஊனமுற்றவரைப் பார்த்து இகழும்முன் அந்த ஊனம் நமக்கு வந்தால் என்ன ஆகும் என்று யோசித்துப் பார்த்தால் நாம் அவரை இகழமாட்டோம்.

7. எள்ளி நகையேல் – பிறரை அவரது மனம் புண்படும்படி பேசுவது, அவர்களைப் பார்த்து கேவலமாகச் சிரிப்பது போன்றவைகளைத் தவிர்க்க வேண்டும்.

8. ஏளனம் பேசேல் – மற்றவர்களைக் குறைத்து மதிப்பிட்டுப் பேசுதல், அவதூறு பேசுதல், இவரிடம் அவரைப் பற்றி ஏளனமாகப் பேசுதல், அவரிடம் இவரைப் பற்றி ஏளனமாகப் பேசுதல் இவைகளையெல்லாம் தவிர்க்க வேண்டும்.

9. ஐம்புலன் அடக்கு – நமது ஐம்புலன்களால் வரும் பிரச்சினைகள்தான் அதிகம். எனவே ஐம்புலங்களை அடக்கி ஒழுக்கமாக வாழ வேண்டும்.

10. ஒன்றே இறைவன் – சாதி, மத, இன கலவரங்கள் கூடாது. உலகில் உள்ள அனைவருக்கும் இறைவன் ஒருவனே என்னும் எண்ணம் வேண்டும்.

11. ஓரம் போகேல் – எந்த ஒரு செயலிலும் முடியாது என்ற விளிம்பிற்கு செல்லக் கூடாது. அதாவது ஒரு செயலைச் செய்யத் தொடங்கிவிட்டு அது முடியாது என்று ஓரம் போகக் கூடாது. விளிம்பில் சென்றால் என்ன நடக்கும்? நிலை தடுமாறி விழுந்து பலத்த அடி வாங்குவோம்.

12. ஔவை சொல் கேள் – இங்கு ஔவை என்பதை அனுபவ அறிவு உடைய வயதானவர்கள் என்னும் அர்த்தத்தில் குறிக்கிறேன். எனவே பெரியவர்கள் சொல்வதை கடைபிடிக்க வேண்டும். அது நமது வாழ்கையின் முன்னேற்றதிற்கு உதவும்.

13. அஃதும் இஃதூம் மேல் – அன்று ஔவை சொன்ன ஆத்திச் சூடியும் இன்று நான் எழுதியிருக்கும் ஆத்திச் சூடியும் வாழ்கையில் கடைபிடிக்கவேண்டிய மேன்மையான கருத்துக்கள்.


Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

2 Comments

  1. Aasai ஜூலை 7, 2013

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading