நாம் சிரிக்கும் நாளே திருநாள் – கவிதை

fireworks-பட்டாசு

பாவத்தில் பிறந்து பாவத்திலே வளர்ந்து

பாவமூட்டை சுமந்து பரகதி சேர

பதற்றமாய் வாழும் பாவி மானிடா!

பள பளப்பாய் தெரியுதா வாழ்க்கை?

மாயையான உலகில் நீ ஒரு நடிகனடா.

பிறந்தேன் வளர்ந்தேன் வாழ்ந்தேன்

Ta-ta போகிறேன் என்கிறாயா?

நீ பிறந்தது வீணிலும் வீணடா.

யார் வாழ்ந்தால் எனக்கென்ன?

நான் வாழ்கிறேன் என நகைக்கிறாயா?

முன்னவனைவிட நீ மிக மோசமடா.

நீ பதுமை பூமிக்கு தண்டமடா.

பிறர் வாழ்வதைப் பார்த்துக் குமுறுகிறாயா?

உன் எரிமலைக் கண்களால் சுடுகிறாயா?

நீயொரு கொலை பாதகனடா.

பிறரை சுரண்டி நிதம் வாழ்கிறாயா?

அடே! நீ பூமிக்கு பாரமடா.

பிறர் சிறக்க தான் மகிழ்ந்து

காக்கைப்போல் பலர்க்கும் பகிர்ந்து

நிறைவானவனை நிதம் நினைத்து

வாழ்வின் பொருளுணர்ந்து வாழ்ந்து

நிம்மதி மூச்சு என்ற சைவ சிரிப்பை

நாம் உதிர்த்து வாழும் நன்னாட்களே

நண்பா! நாம் கொண்டாடும் திருநாளடா!

13 Comments

  1. Rupan அக்டோபர் 15, 2013
  2. Ranjani Narayanan அக்டோபர் 15, 2013
    • Ranjani Narayanan அக்டோபர் 15, 2013
    • மரிய ரீகன் ஜோன்ஸ் அக்டோபர் 15, 2013
  3. Sasi Kala அக்டோபர் 15, 2013
    • மரிய ரீகன் ஜோன்ஸ் அக்டோபர் 15, 2013
  4. Ranjani Narayanan அக்டோபர் 15, 2013
  5. Rupan அக்டோபர் 16, 2013
  6. Iniya நவம்பர் 5, 2013

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.