பனை மரத்திலிருந்து கீழே விழுந்து பொழச்சவனும் இருக்கான்; புல் தடுக்கி விழுந்து செத்தவனும் இருக்கான்.
அறிவாளியா இருந்து அழிஞ்சவனும் இருக்கான்; சிறு உழைப்பாளியா இருந்து முதலாளியா ஆனவனும் இருக்கான்.
ஏழை வீட்டுல பொறந்து மாடி வீட்டுல வாழ்க்கப்பட்டவளும் இருக்கா; மகாராணியா வளர்ந்து கோர வாழ்க்கைக்கு ஆளானவளும் இருக்கா.
அதிஷ்டத்துல முன்னேறுபவங்களும் இருக்காங்க; கஷ்டத்துல ஆண்டியாகறவங்களும் இருக்காங்க.
படிச்சி படிச்சியே பைத்தியம் ஆனவனும் இருக்கான்; படிக்காமலேயே தேர்ச்சி பெறுபவனும் இருக்கான்.
பெத்த பிள்ளையால வஞ்சிக்கப்பட்டவங்களும் இருக்காங்க; பெறாத பிள்ளையால உச்சி குளிர்ந்துபோனவங்களும் இருக்காங்க.
படிச்ச முட்டாள்களும் இருக்காங்க; படிக்காத மேதைகளும் இருக்காங்க.
உதவி உயர்ந்தவங்களும் இருக்காங்க; உதவாம ஓட்டாண்டியா ஆனவங்களும் இருக்காங்க.
பழகி வஞ்சித்தவங்களும் இருக்காங்க; பழகாமலேயே காப்பாற்றுபவங்களும் இருக்காங்க.
கொடுக்கற கொடையாளிகளும் இருக்காங்க; கொடுக்காத கஞ்சன்களும் இருக்காங்க.
நம்பாம ஏமாந்தவங்களும் இருக்காங்க; நம்பி பொழச்சவங்களும் இருக்காங்க.
உழச்சி முன்னேறனவங்களும் இருக்காங்க; உழைக்காம பிறர சுரண்டுறவங்களும் இருக்காங்க.
பாவம் செஞ்சி திருந்தி வாழ்ந்தவங்களும் இருக்காங்க; புண்ணியம் செய்யறேன்னு பாவியானவங்களும் இருக்காங்க.
பிறருக்காகக் கதறி அழுபவங்களும் இருக்காங்க; பிறர கதற வச்சி சிரிப்பவங்களும் இருக்காங்க.
பேசியே சொதப்புகிறவங்களும் இருக்காங்க; பேசாம சாதிப்பவங்களும் இருக்காங்க.
அள்ளிக்கொடுப்பவங்களும் இருக்காங்க; அள்ளிக்கொள்ளவே வாழ்பவங்களும் இருக்காங்க.
ரசிச்சு வாழறவங்களும் இருக்காங்க; வாழாம சலிச்சிக்கிறவங்களும் இருக்காங்க.
பிறருக்காக ஓடா உழைக்கறவங்களும் இருக்காங்க; பிறர் உழைப்பில் அட்டையா ஒட்டிக்கொள்கிறவங்களும் இருக்காங்க.
அடக்கமா அரும்பெரும் செயல்களைச் செய்யறவங்களும் இருக்காங்க; ஆரவாரத்தோடு உப்புக்கு உபயோகமில்லாத செயல்களைச் செய்யறவங்களும் இருக்காங்க.
இந்த உண்மைகளுக்கான உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
வணக்கம்
அண்ணா
நல்ல வினாக்கள் வினாவி பதிவு அமைத்த விதம் நன்று.. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்களது வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி.
ஆனால், நான் வெறும் 24 வயதாகும் சின்னப் பையந்தான்.
உண்மைகள்…
தொடர வாழ்த்துக்கள்…
மிகவும் ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
tha.ma 2
mr.jon…padichipaithiyakaran anavanum irukan…..it is ture….
நல்ல முயற்சி,,,,, பதிவுகள் அருமை…….keep rocking…நான் தங்கள் பக்கத்து ஊரான விரியூரில் வசிக்கிறேன்
ஆஹா! என்னே ஆனந்தம்! பக்கத்து ஊரில் இருந்து தாங்கள் அனுப்பிய பாராட்டுக்கு நன்றி. அநேகமாக நீங்கள் என் தம்பி ஜெரோம்-இன் நண்பராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உண்மைதானே?