இறைவனின் இன்பப் படைப்பினிலே
இனிமை எல்லாம் இருக்குது !
இதய வானில் மிதந்து வந்து
இன்னிசை இனிதே பாடுது !
எத்தனை அழகு என்று
என் இதயம் எண்ணி மகிழுது!
இதய வாசல் திறந்து வைத்து
வரவேற்பு அளிக்கச் சொல்லுது!
கண்ணுக்குக் கடல் விருந்தாக
காட்சியெல்லாம் ஜொலிக்குது!
களிப்பூட்டும் கலை அழகாக
கண்ணெதிரே காணக் கிடக்குது!
சிந்திக்க வைக்கும் சித்திரமாக
சிதறி மணம் பரப்புது!
சித்தரிக்கும் சிலை வடிவாக
சிறந்த படைப்பு சிரிக்குது!
கண்கவர் கலைக் காவியமாக
கண்களில் பசும் திரையோடுது!
பசுமை எழிலின் துள்ளலாக
பார்ப்பவர் மனம் மயக்குது!
உழைப்பவர்க்கு கொடை வள்ளலாக
உண்டிட உணவும் அளிக்குது!
இறைவனின் உயிர் ஓவியமாக – என்
இதயம் கண்டு களிக்குது!
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
அழகான அருமையான வரிகள்…
ரசித்தேன்… வாழ்த்துக்கள்…
அருமையான கவிதை….
பாராட்டுகள்.