happy-easter

வேண்டாம், வேண்டவே வேண்டாம்

happy-easter

Credit:Flickr

இந்த ஈஸ்டர் திருநாளின் உண்மைப்பொருள் உணர்ந்து சிலவற்றை நமது வாழ்கையில் தவிர்த்தால் நன்மை பயக்கும், நம் வாழ்வும் சிறக்கும் எனக் கருதுகிறேன்.

நிறைந்தவனை நினையாத நாளே வேண்டாம்.

உதட்டில் உறவும் மனத்தில் களவும் வேண்டாம்.

தன்னைப்பற்றியே நினைக்கும் கொள்கை வேண்டாம்.

பகைவர்களைப் பார்த்துப் பதறுதல் வேண்டாம்.

மனிதநேயம் இல்லாத மனங்கள் வேண்டாம்.

கடமை தவறும் களவாணிகள் கூட்டு வேண்டாம்.

நிம்மதி குலைக்கும் நினைவுகள் வேண்டாம்.

பழிக்குப் பழி வாங்கும் பாவம் வேண்டாம்.

கண்ணீரை வருவிக்கும் கடுஞ்சொற்கள் வேண்டாம்.

பழிச்சொல் பரப்பும் பகட்டு வாழ்க்கை வேண்டாம்.

கயவர்களைக் கண்டு கரம் அசைக்கவும் வேண்டாம்.

நம்பி வெம்பி நாசமாக வேண்டாம்.

பசப்பிகளின் பாசப்பிணைப்பு வேண்டாம்.

கூஜா தூக்கும் குரங்குக் கூட்டம் வேண்டாம்.

கலங்கம் கொண்ட காதலின் கற்பனையும் வேண்டாம்.

சோம்பித் திரிபவர்களின் சொந்தம் வேண்டாம்.

ஆணவமும் ஆரவாரமும் அறியாமலும் வேண்டாம்.

மாபாதக மாதவறுகள் மறந்தும் வேண்டாம்.

பிறரை பணயம் வைக்கும் பொற்குவியலாயினும் வேண்டாம்.

துக்கித்து வாழும் துளிநேரமும் வேண்டாம்.

மேற்கண்ட கருத்துக்களைக் கடைப்பிடிப்போம்; புதுவாழ்வு வாழ்வோம். அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.


Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

10 Comments

  1. Ramani S ஏப்ரல் 20, 2014
  2. Ramani S ஏப்ரல் 20, 2014
  3. வெங்கட் நாகராஜ் ஏப்ரல் 20, 2014
  4. தனிமரம் ஏப்ரல் 20, 2014
  5. karthik sekar மே 1, 2014

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading