விறகைக் கனவில் கண்டால் என்ன பலன்?
நாம் ஒவ்வொருவரும் தினமும் பல கனவுகளைக் காண்கிறோம். அவைகள் பெரும்பாலும் நமது ஆழ்மனதின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், நம் முன்னோர்கள் தங்கள் வாழ்நாளில் அனுபவத்தில் ஆய்ந்தறிந்து கனவுகளின் பலன்களைப் பாரம்பரியமாகக் கூறி வருகின்றனர்.
பெரியவர்கள் கூற்றுப்படி நமக்கு வரும் கனவுகளில் சில நமது வாழ்வில் தொடர்புடையதாகவும், சில கனவுகள் நமது வாழ்க்கைக்கு சிறிதும் சம்பந்தமில்லாததாகவும் வருகின்றன. கனவுகளின் அருத்தங்களை தெரிந்துகொண்டால் நமது வாழ்வில் நடக்கப் போகும் சம்பவங்களைக் கவனமாகக் கையாளலாம்.
நாம் காணும் கனவுகளில் மிக முக்கியமான ஒரு கனவுதான் இந்த விறகு கனவில் வருவது. அதனைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
விறகு கனவில் வருவதன் அருத்தம்
பொதுவாக விறகு கனவில் வருவது என்பது கலகத்திற்கான அறிகுறி. எந்தச் சூழ்நிலையில் நாம் விறகைப் பார்க்கிறோம் அல்லது எங்குப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து அதன் பலன் மாறுபடும். அதனைப் பற்றி மேலும் காண்போம்.
விறகு வீட்டினுள் தென்பட்டால் என்ன பலன்?
நமது கனவில் விறகு வீட்டிற்குள்ளேயே இருந்தால் வீட்டில் உள்ளவர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படும். சிறிதளவு விறகு தென்பட்டால் சின்ன சின்னப் பிரச்சனைகள் வரும். அதுவே சுமை சுமையாக அல்லது கட்டுக் கட்டாக விறகுகள் தென்பட்டால் அதற்கேற்றார் போன்று சண்டை சச்சரவுகளின் பாதிப்புகள் இருக்கும்.
விறகு வீட்டின் வெளியில் தென்பட்டால் என்ன பலன்?
விறகு வீட்டின் வெளியில் தென்பட்டால், அக்கம் பக்கத்து வீட்டாருடன் பிரச்சனை வரலாம். நமது வீட்டிற்கு அருகிலேயோ அல்லது வீட்டின் முன் புறத்திலோ விறகிருந்தால் நமது குடும்பத்தில்தான் பிரச்சனை. ஒரு வேளை அது சிறிய அளவில் வரலாம்.
விறகை ஒடிப்பது போன்றோ அல்லது பிளப்பது போன்றோ கனவு கண்டால் என்ன பலன்?
நாம்தான் பிரச்சனைக்குக் காரணமானவர் என்பதை கருத்தில் கொண்டு மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும்.
விறகு கொடுப்பது அல்லது பெறுவது போன்ற கனவுகள்
ஒருவரிடம் நாம் விறகை கொடுத்தாலோ அல்லது பெற்றாலோ அவருக்கும் நமக்கும் சண்டை நிச்சயம்.
விறகை கையில் வைத்திருத்தல் அல்லது சுமப்பது போன்ற கனவு கண்டால் என்ன பலன்?
இதுவும் கலவரத்திற்கு நாம்தான் அச்சாணியாக இருக்கப் போகிறோம் என்று அருத்தம். எனவே நம்மால் எந்தப் பிரச்சினையும் வராமல் எச்சரிக்கையுடன் இருப்பதே சிறந்தது.
விறகை எரிப்பது போன்று கனவு கண்டால் என்ன பலன்?
வரப்போகும் சண்டை சச்சரவுகளை நாம் தடுத்துவிட்டோம் என்று அருத்தம். எனவே சண்டைகள் ஏற்பட்டாலும் அந்தப் பிரச்சனை சரியாகிவிடும்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
பொதுவாகவே விறகு கனவில் வருவது கலகத்திற்கும் சண்டை சச்சரவுக்கும் அறிகுறி, நல்லதல்ல. அப்படி கனவு கண்டுவிட்டால் நாம் மிகவும் எச்சரிக்கையாகப் பேசுதலும் நமது செயல்களைப் பொறுப்புடனும் செய்தலும் அவசியமாகிறது; சொல் செயல்களில் கவனமும் நிதானமும் வேண்டும்.
பொறுப்புத்துறப்பு
இந்தத் தளத்தில் கூறப்பட்டிருக்கும் கனவுகளின் பலன்கள் அனைத்தும் பெரியவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் அவர்களிடமிருந்து பெறப்பட்ட விளக்கங்கள் ஆகும். தமிழ் சமூகத்தில் இந்த இந்தப் பழக்கங்கள் இந்த இந்த மரபுகள் எல்லாம் இருக்கின்றன என்பதை இணையத்தில் பதிவு செய்ய மட்டுமே இத்தளம் ஒரு கருவியாக இருக்கிறது. இந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதோ அல்லது நிராகரிப்பதோ வாசகர்களின் விருப்பத்திற்கு மட்டுமே உட்பட்டது; இத்தளம் பொறுப்பன்று.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.