அனைத்து உறவுகளையும் வளர்வானம் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன். என் பெயர் ரீகன் ஜோன்ஸ். நான் ஏற்கனவே தமிழ்ப்பிரியன் எனும் வலைப்பூவை நடத்தி வந்தேன். tamilpriyan.com தளத்தின் பயனர்கள் பலருக்கு என்னைத் தெரிந்திருக்கும்.
இந்தத் தளம்தான் தமிழ்ப்பிரியன் என்று இருந்தது. அந்தத் தளத்தில் கடைசியாக நான் இடுகையிட்டது கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பு. தவிர்க்க முடியாத காரணத்தினால் என்னால் இந்தப் பத்து வருடமும் தொடர முடியாமல் போனது. Domain-ஐ renew செய்ய மறந்துவிட்டேன். எனவே, எனது தமிழ்ப்பிரியன் தளமும் delete செய்யப்பட்டுவிட்டது.
தற்போது நான் மீண்டும் வலைப்பதிவு தொடர்ந்து எழுதலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன். எனவே, தமிழ்ப்பிரியன் தளத்தில் உள்ள அனைத்து இடுகைகளையும் புதிய தளமான வளர்வானத்திற்கு மாற்றிவிட்டேன். இன்றிலிருந்து இந்த வளர்வானம் தளத்தில் அடிக்கடி புதிய இடுகைகள் இடப்படும், என்னோடு இணைந்திருங்கள்.
ஏற்கனவே தமிழ்ப்பிரியன் தளத்தின் செய்திமடல் சந்தாதாரராக இருந்தவர்களுக்கு வளர்வானம் தளத்திலிருந்து செய்திமடல் மின்னஞ்சல் செய்திகளாக அனுப்பப்படும். வளர்வானம் உங்கள் privacy-ஐ மதிக்கிறது. விருப்பமில்லாதவர்கள் unsubscribe செய்துகொள்ளலாம்.
தமிழ்ப்பிரியன் தளத்தில் சுவாரசியமான அரிய தமிழ் தகவல்கள், விவாதங்கள், சிறுகதைகள், நகைச்சுவைகள் மற்றும் சமுதாயக் கருத்துக்கள் பதிவிடப்பட்டன. இந்தப் புதிய வளர்வானம் வலைப்பூவில் சிறிது மாற்றங்களுடன் புதிய பல தலைப்புகளில் உங்களுக்குத் தினமும் தகவல்களைத் தந்து மகிழ்விக்க நான் ஆவலோடு உள்ளேன். புதிய வருகையாளர்கள் செய்திமடல்(newsletter) சந்தாதாரராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் இலவசமாக உங்கள் மின்னஞ்சலில் பெற்றிடுங்கள்.
இந்த நேரத்தில், இதுவரை பதிவிட்டதில் சில முக்கிய மற்றும் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட இடுகைகளைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். அவைகளைப் படித்துப் பயன்பெறுங்கள். அப்போதுதான் இந்தத் தளம் எப்படிப்பட்டது என்று புரிந்துகொள்வீர்கள்.
புதிய வருகையாளர்கள் இந்தத் தளத்தின் பதிவுகள் உங்களுக்குத் பிடித்திருந்தால் newsletter subscriber-ஆக இணைந்திடுங்கள். ஏற்கனவே subscriber-ஆக இருப்பவர்கள் தொடர வேண்டாமென்று நினைத்தால் unsubscribe செய்துகொள்ளலாம்.
அதிகம் பார்க்கப்பட்ட இடுகைகள்
- Tamil Tongue Twisters: Part – 1, Part – 2, Part – 3
- தமிழைப் பற்றிச் சில விவாதங்கள்
- Meaning of Dreams in Tamil: Part – 1, Part – 2
- கூடாத எலும்பையும் கூட வைக்கும் கல்லத்தி
- தமிழ் நண்பர்கள் இதனைப் படிக்கவும்
- போதைப் பழக்கமும் அடுத்த தலைமுறையின் முன்னேற்றமும் – கட்டுரை
- நாம் சிரிக்கும் நாளே திருநாள் – கவிதை
- தமிழின் அடைமொழிகள்
- அது என்ன கிளா நீர்?
- சும்மா என்றால் சும்மாவா? சும்மா படிங்க
சிறுகதைகள்
- சிற்றுலா (Picnic) – உண்மைச் சிறுகதை
- பீட்சா 3 ( PIZZA 3)
- இன்னைக்கு எந்த மண்டபத்தில் கலியாணம்?
- அம்மா = பாசத்தின் தெய்வம் – சிறுகதை
பேய் கதைகள்
பழமொழிகள்
- ஆவாரைப் பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா
- பழமொழிகளும் விளக்கங்களும் பகுதி – 11
- நிறைய பழமொழிகள் எடுத்துக்காட்டுடன் விளக்கப்பட்டுள்ளன. அவைகளைப் படிக்கப் பழமொழி category-க்குச் செல்லவும்.
சமூக விழிப்புணர்வுப் பதிவுகள்
- வளமுடன் வாழ 108 சூத்திரங்கள்
- இப்படியும் சில பெற்றோர்கள்
- குழந்தைகளிடம் பொய் பேசுகிறீர்களா?
- அன்பே சிவம்
ஒரு சிறு வேண்டுகோள்
சிலவருடங்கள் தமிழ்ப்பிரியன் தளம் live-இல் இல்லாததால் என் அனைத்துப் பதிவுகளையும் நிறையபேர் தங்கள் தளங்களில் நகலெடுத்து பதிவேற்றிவிட்டனர். அதனால், இந்தத் தளத்திற்கு குறைந்த பார்வையாளர்களே வருகின்றனர். இந்தத் தளத்தில் இருப்பது போன்று வேறு ஏதேனும் ஒரு தளத்தில் பதிவுகளை நீங்கள் காண நேர்ந்தால், என்னுடைய தளத்தின் பதிவுகளே உழைப்பினால் உருவான உண்மையான பதிவுகள் மற்றவை திருடப்பட்ட போலிகள் என்பதைக் கருத்தில் கொள்க.
மேலும், இந்தத் தளம் உங்களுக்குப் பிடித்திருந்தால் வளர்வானம் பற்றி நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தியும் உங்களுக்குப் பிடித்தமான இடுகைகளைச் சமூக வலைதளங்களில் share செய்தும் உதவவும். மிக்க நன்றி, விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.