நீங்கள் தமிழில் வலைதளமோ அல்லது வலைப்பதிவோ உருவாக்க விரும்புகிறீர்களா?

உங்கள் தளத்தின் பொருள் மற்றும் இடுகைகள் தமிழில் எழுதப்படவேண்டுமா?

Blogger அல்லது WordPress உபயோகப்படுத்துகிறவர்களுக்கு தமிழில் எழுதுவது சுலபம். ஏனென்றால் அவற்றுள் தமிழில் எழுதுவதற்கான அனைத்து மென் கருவிகளும் (tools) தரப்படுகின்றன. ஆனால் மற்ற வலைகளில் எழுதுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. மேலும் உங்கள் கணிப்பொறியிலேயே நீங்கள் உங்கள் கட்டுரைகளை எழுதி அதை திருத்தி பின் இணையத்தில் இட உங்களுக்கு ஒரு சரியான தமிழ் மென்பொருள் வேண்டும். கீழ்க்காணும் இரு மென்பொருட்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்.

மென்பொருள் – 1

Microsoft Indic language input tool என்னும் மென்பொருளை இங்கு பதிவிறக்கம் (download) செய்யவும். பின் அதை install செய்யவும். அதன் பிறகு taskbar ல் வலது பக்கத்தில் அது இருக்கும்.

taskbar

மேலுள்ள படம் மூலம் நீங்கள் அதை உபயோகிக்கும் முறையை தெளிவாக அறிந்து கொள்ளலாம். தேவையான application அல்லது இணையதளத்தை open செய்தபிறகு TA என்னும் option ஐ தேர்ந்தெடுக்கவும். தமிழ் உச்சரிப்பை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழ் வார்த்தைகளைப் பெறலாம்.

tamil-input

மென்பொருள் – 2

இன்னும் உங்களுக்கு advanced featured மென்பொருள் வேண்டும் என்றால் அழகி என்னும் மென்பொருள் பயன்படும். அதனை இங்கு பதிவிறக்கம் செய்யவும். எளிய முறையில் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யலாம். மேலும் செய்முறை விளக்கங்களும் (tutorials) உள்ளன.

-மென்பொருள்