அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

இந்த பழமொழியில் அரண்டவன் என்பவன் பேய் பயத்தில் இருப்பவன். பல பேய் கதைகளை கேட்டு மனதில் பயத்துடன் இருப்பான். அதனால் அவன் இருட்டில் நடக்கும்போது எதைப் பார்த்தாலும் பேய் என்று பயப்படுவான்.

நாம் இதை பல இடங்களில் உபயோகப்படுத்துகின்றோம். உதாரணத்திற்கு, ஒருவன் பல விஷயங்கலில் பலமுறை பலரிடம் ஏமாந்துபோய் இருக்கிறான் என்றால், அவன் மனதில் அனைவரும் கெட்டவர்கள் என்ற எண்ணம் ஆழமாக பதிந்து இருக்கும். அனைவரையும் தவறாக எடை போட்டு வைத்திருப்பான். எவரைக் கண்டாலும் பயத்துடன் கூடிய அவ நம்பிக்கையுடன் பார்ப்பான். அவனைப் பாரத்து இந்த பழமொழியைப் பயன்படுத்துவார்கள்.

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.