செத்தும் கெடுத்தான் செவ்வூர் சிவந்தியப்பன்

‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. சீதக்காதி எனும் வள்ளல், தான் வாழும்போதும் மக்களுக்கு மிகவும் உதவிகரமாகக் கொடைகள் கொடுத்ததாகவும் தான் இறந்த பின்பும் மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டுமென்று ஏற்பாடுகள் செய்துவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

அதுபோல, செவ்வூர் சிவந்தியப்பன் என்பவன், தான் வாழ்ந்தபோதும் ஊர் மக்களை நிம்மதியாக இருக்க விடவில்லை என்றும் அவர்களுக்கு எப்போதும் குடைச்சல் கொடுப்பதும் அவர்களைப் பிரச்சினையில் மாட்டி விடுவதுமே தொழிலாகக் கொண்டிருந்தான் என்றும் தான் இறந்துவிட்டால் அந்த ஊர் நிம்மதியாக இருக்கக் கூடாது என்பதற்காக அந்த ஊர் மக்களைத் தீராத பிரச்சனையில் மாட்டிவிட்டு இறந்துவிட்டான் என்றும் ஒரு கதை கூறுவர். எனவே, செவ்வூர் சிவந்தியப்பனை போன்று எப்போதும் அடுத்தவர்களுக்குக் கெடுதல் செய்துகொண்டே இருப்பவர்களை ‘செத்தும் கெடுத்தான் செவ்வூர் சிவந்தியப்பன்’ எனும் பழமொழியைக் கொண்டுக் குறிப்போம்.


Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

One Response

  1. Charles ஜூலை 23, 2021

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading