கோலம் போடுவதற்கான காரணம் என்ன?

கோலம்நம் வீடுகளில் கோலம் போடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.காலையில் எழுந்து வாசலைப் பெருக்கி கோலம் போடுவார்கள்.தற்போது கோலம் போடும் பழக்கம் கிராமங்களில் மட்டுமே மிஞ்சியுள்ளது.அதுவும் ஒரு சிலர் விழாக்காலத்தில் மட்டுமே கோலம் போடுகின்றனர்.கோலம் போடுபவர்கள் கூட எதற்காக செய்கிறோம் என்றே தெரியாமல் செய்கின்றனர்.
அந்த காலத்தில் காலையில் வாசலில் சாணியை கரைத்து தெளித்தபின் வாசலை பெருக்கி பின் அரிசி மாவால் கோலம் போடுவார்கள்.
எதர்க்காக அரிசி மாவால் கோலம் போடுகிறார்கள்?
பெரியவர்கள் செய்வதற்க்கு கண்டிப்பாக காரணம் இல்லாமல் இருக்காது.அரிசி மாவால் போடும்போது எறும்புகள் அதை இரையாக்கிக் கொள்கின்றன.குருவிகளும் அரிசி மாவை சாப்பிடுகின்றன.அதாவது வாசலையும் அழகாக வைத்துருக்க வேண்டும்.அதே சமயம் பறவைகளுக்கும் எறும்புகளுக்கும் அரிசி இரையாக பயன்படும் என்பதே கோலம் போடுவதின் நோக்கம்.
ஆனால் இன்று என்ன நடக்கிறது?
கோலம் போட கோல மாவைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.அதை சுண்ணாம்புக் கல்லில் தயாரிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.மேலும் அது உயிரினங்களுக்கு பயன்படுவதுமில்லை.கோலமாவு பல வண்ணங்களில் கிடைக்கிறது.அந்தக்காலதுப் பெரியவர்களுக்கு தாங்கள் செய்வது மற்றவர்களுக்கும் உபயோகப்படவேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் இருந்தது.ஆனால் கோலம் எதற்காக போடுகிறோம் என்பதை தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்காததால் இப்போது கோலமாவில் கோலம் போடும் நிலைமை வந்துவிட்டது.ஆனால் அதுவும் சரிதான்.இந்த காலத்தில் ஏது குருவி.அதையும்தான் அழித்துவிட்டார்களே நம்மவர்கள்.
சரி.எதற்காக சாணி தெளித்து வாசலை பெருக்கினார்கள்?
அதற்க்கும் முக்கியமான காரணம் இல்லாமல் இருக்காது.எனக்குத் தெரிந்தது என்னவென்றால்,சாணி ஒரு கிருமி நாசினி.அதை வீட்டிற்க்கு முன்னால் தெளிப்பதால் கிருமிகள் நம்மை அண்டுவது குறையும்.
இப்படி நாம் செய்வதை எதற்காக செய்கிறோம் என்று புரிந்துகொண்டு செய்யும்போது அந்த செயல் காலத்தால் அழியாமல் இருக்கும்.

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.