மாக்களில் மக்களாய்ப் பிறத்தல் அரிது
மனத் தூய்மையோடு மகிழ்ந்து வாழ்தல் பெரிது.
ஊர்கேட்க உத்தமன் எனச் சொல்லுதல் எளிது
குணம் கொண்டவனாய் மனங்கள் போற்ற வாழ்வது கடிது.
பிறர் வாழத் தானும் வாழ்ந்து
அறம் செழிக்க வாழ்வு வாழ்ந்திடல்
சொல்லுதல் யார்க்கும் எளிய, எளிய.
படைத்தவன் பாராட்டும்படி வாழ
மனிதர் மனங்களில் நிலையாய் வாழ
வாய்ச் சொல்லில் வீரம் போதாது.
சொல் செயலில் சோரம் போகாது
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை
‘முடியும்’ என முதல்வனாய்த் துணிந்திடு.
நல்லவனாய் நாளும் நலமாய் வாழ்ந்திட
நல்லதொரு முயற்சியை இன்றே முனைந்திடு.
முயற்சிகள் வளர்ந்தால் மரமாகும்
தோற்றால் நல் வாழ்வின் உரமாகும்.
முயன்று வெற்றி கண்டால் நீ தலைவனாவாய்
தோல்வியுற்றால் நல்லதோர் வழிகாட்டியாவாய்.
பதறாதே மனிதா மனம் பதைக்காதே
மணம் பரவி, மனம் கவர மண்ணில் வாழ்ந்திடு
மாண்டு போகும்முன் மானிடத்தின் மாண்பேற்று.
சுயநல வாழ்வு எல்லாம் பாழு, பாழு
பொருளுணர்ந்து வாழு! பொருள்பட வாழு!
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
வெற்றி / தோல்வி – நம் மனதைப் பொறுத்து…
நல்லதொரு வழிகாட்டியே என்றும் இனிமை…
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!