இந்தப் பொங்கலுக்கு வித்தியாசமாக cake செய்து சாப்பிடலாம் என்று தோன்றியது. எனவே தேவையான பொருட்களை வாங்கி விறகு அடுப்பில் செய்தேன். சமையல் எரிவாயு விரைவிலேயே தீர்ந்துவிடுவதால் அதனைச் சிக்கனமாகப் பயன்படுத்தவேண்டிய நிலை. இந்தக் கேக் செய்யும் முறையை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கலுடன் கேக்கையும் செய்து சாப்பிடுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
மைதா மாவு: | கால் கிலோ |
சர்க்கரை: | கால் கிலோ |
முட்டை: | ஐந்து |
பால்: | கொஞ்சம் |
வெண்ணெய் அல்லது நெய்: | கால் கிலோ |
வெண்ணிலா essence: | மூன்று தேக்கரண்டி |
Baking Powder: | ஒரு தேக்கரண்டி |
Baking Soda: | ஒரு தேக்கரண்டி |
முந்திரி, Cherry இவை போன்ற அலங்காரப்பொருட்கள்: | தேவையான அளவு |
Food Colour Powder: | சிறிதளவு |
செய்முறை
தேவையான பொருட்களைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். கேக்கை பொதுவாக ovenல் செய்வார்கள். ஆனால் நாம் அடுப்பில் செய்வதால் ஒரு இரும்பு தோசைக்கல்லை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மணலை பரப்பி (இரண்டு inch அளவு) அதன்மேல் கேக் கலவையுள்ள அலுமினியப் பாத்திரத்தை (கண்டிப்பாக அலுமினியம்தான்) வைத்துச் செய்யப்போகிறோம். சரி இப்போது அந்தக் கேக் கலவை செய்யும் முறையைப் பார்ப்போம்.
மைதா மாவு, சர்க்கரை, முட்டை, வெண்ணெய் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும்.
பின் சர்க்கரை, வெண்ணிலா essence மற்றும் கொஞ்சம் பால் சேர்த்து நன்றாக மென்மையாகும்வரை கலக்கவும்.
பிறகு நிறத்திற்கு colour powder சேர்த்து, baking powder, baking soda போட்டு நன்கு கலக்கிக்கொள்ளவும்.
Cherry பழம், முந்திரி போன்றவற்றை சேர்த்து கலக்கவும்.
ஒரு தட்டையான அலுமினியப் பாத்திரத்தில் நெய் தடவி அதில் இந்தக் கேக் கலவையை ஊற்றிச் சமமாகப் பரப்பவும். பின் அந்தப் பாத்திரத்தைக் கண்ணால மூடியால் மூடி (காற்று போக) முன்பே கூறியதைப் போன்று தோசைக்கல்லில் வைத்து வேகவைக்க வேண்டியதுதான். குறிப்பு: மிதமான தீயில்தான் வேகவைக்க வேண்டும்.
நான் பல நிறம் கலந்ததால் அந்தக் கேக் கலவை அப்படியிருக்கிறது. ஒரு நாற்பத்தியைந்து நிமிடம் அல்லது ஐம்பது நிமிடம் கழித்து பார்த்தால் கேக் நன்கு உப்பியிருக்கும்.
அவ்வளவுதான். சுவையான கேக் தயார்.
நான் செய்த கேக் ஒன்னேகால் கிலோ வந்தது. இதற்கான செலவு ரூ.110. இதுவே கடையில் வாங்கினால் ஒரு கிலோ ரூ.300. நீங்களும் முயற்சி செய்து பார்த்துச் சொல்லுங்கள்.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
நாங்களும் செய்து பார்க்கிறோம்…
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
சரி செய்து பார்த்திடுவோம்.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் …!
தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தை பிறந்தாச்சு
உலகெங்கும் தமிழ் வாழ
உலகெங்கும் தமிழர் உலாவி வர
வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!
தங்களுக்கும் தை திருநாள் நல்வாழ்த்துக்கள்.
https://www.youtube.com/watch?v=Q3LYWW92wBA
புத்தம் புதிய குறும்பட ட்ரைலர் :- Tamil and English love horror comedy action short film trailer
மேலும் விபரங்களுக்கு Free Short films
பொங்கல் நல்வாழ்த்துக்கள் Ashok Kumar.