நூறாவது பதிவு

இது என்னுடைய நூறாவது பதிவு. இன்று இதுவரை நடந்ததைத் திரும்பிப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். முதலில் என்னைப் பற்றி கூறிவிடுகிறேன். ஏனெனில், இந்த தளத்தின் உறுப்பினர்கள் பலருக்கு என்னைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுவரை என்னைப் பற்றிய விவரங்களை பதிவிட்டதும் இல்லை. இன்று என் விவரங்களைப் பதிவிடும் நிலையில், வலை உறவுகள் என்னைப் பற்றி புரிந்துகொள்வதற்கும் நட்பு வட்டம் உருவாகுவதற்கும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன், விரும்புகிறேன்.

Maria Regan Jonse

என் முழுப் பெயர்: T.மரிய ரீகன் ஜோன்ஸ்.

மதம்: கிறித்துவன் (வன்னியர் குலச் சத்ரியர்).

(நீங்க என்ன கேக்கிறீங்கன்னு புரியுது. என்னமோ கல்யாணமாலை bio-data மாதிரி எழுதுறானேன்னுதானே பாக்கிறீங்க? என்னைப் பற்றிய சரியான விவரம் தெரிவிப்பதற்குதாங்க.)

ஊர்: பழையனூர், சங்கராபுரம் TK, விழுப்புரம் DT, தமிழ் நாடு.

வயது: 24

கல்வித்தகுதி: BE-ECE. (12 ஆம் வகுப்புவரை தமிழ் வழிக்கல்வியில் பயின்றேன்.)

அப்பா: தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்.

அம்மா: நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை.

தம்பி: Pursuing BE-EEE.

 

இந்த இடத்தில் எனக்கு ஒரு நகைச்சுவைத் துணுக்கு ஞாபகம் வருகிறது.

அப்பா: “டேய்! என்ன திமிர்டா ஒனக்கு? நான் சொல்ற பேச்ச கேக்கவே மாட்ற!”

மகன்: “நான் எதுக்குப்பா உங்க பேச்ச கேட்கணும்? நான் ஒன்னும் உங்கள நம்பி இல்ல. நானும் நாலு காசு சம்பாரிக்கிறேன்; சமுதாயத்துல நல்ல நிலமையில இருக்கேன். உங்க பேச்ச கேக்கவே மாட்டேன்.”

அப்பா: “டேய்! உனக்கெல்லாம் ரெண்டு பசுமாடு வாங்கிக் கொடுத்தது தப்பா போச்சுடா. Engineering, MBA ன்னு படிக்கவெச்சி company companyயா வேல தேட விட்டிருக்கணும். அப்பதான் புத்தி வந்திருக்கும்.”

BE படித்தவர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு என்னும் நிலைமை தற்போது வந்துவிட்டது. அந்த நிலமைதான் எனக்கும் இருந்தது. என்னதான் distinction எடுத்தாலும் communication வரவில்லை. அதனால், 4ஆம் வருடம் படிக்கும்போதே வேலை வாங்குவது என்பது கடினமானது. படித்து முடித்தது 2011இல். வீட்டிற்கு வந்தேன். அந்த நேரத்தில் எனது அம்மாவிற்கு ஒரு விபத்தில் தண்டுவடம் பாதிப்பு ஏற்பட்டது. அதனால், அவர்களை விட்டுவிட்டு சென்னைக்கு வந்து வேலை தேட மனம் வரவில்லை. பின் அடுத்தடுத்து பல பிரச்சினைகள். அதனால், வீட்டிலேயே ஒன்றரை வருடம் இருந்துவிட்டேன்.

பின் சென்னை வந்தேன். அந்த சமயத்தில் corporate நிறுவனங்களில் 2012 batch மாணவர்களைத்தான் எடுத்துக்கொண்டிருந்தார்கள். எனவே, எனது படிப்பிற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத (Book Publishing) ஒரு சிறு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தேன். மாதம் 12000 ரூபாய் கொடுத்தார்கள். பின், சில மாதங்களில் 15000 ரூபாயாக சம்பள உயர்வு. அதற்குப் பின் சில மாதங்களில் அந்த நிறுவனத்திற்கு பொருளாதார நெருக்கடி, மீண்டும் 12000 ஆக குறைத்துவிட்டார்கள். பின், அதையும் கொடுக்க அவர்களால் முடியவில்லை. கடைசி இரண்டு மாதங்களாக சம்பளமும் இல்லை. எனவே கடந்த ஜனவரியில் வேலையை விடவேண்டிய சூழ்நிலை.

பின் வீட்டிற்கு வந்து நண்பர்களிடம் பேசியதில் பலர் TNPSC தேர்வுகள் எழுதி அரசு வேலைகளில் இருக்கிறார்கள் என்று தெரிந்தது. அப்போதுதான் நானும் உணர்ந்தேன், எதற்காக சென்னையில் போய் கஷ்டப்படவேண்டும்? நாமும் அரசு வேலைக்கே தயார் செய்யலாமே? நிரந்தர வேலை கிடைக்குமே? என்று தற்போது படித்துக் கொண்டிருக்கிறேன். வீட்டில்தான் இருக்கிறேன். படித்த, வேலை தேடிக்கொண்டிருக்கும் வாலிபர்கள் மத்தியில் ஒரு பொன்மொழி வழக்கத்தில் உள்ளது. ‘Passport இல்லாமல் பாகிஸ்தானே சென்று வந்துவிடலாம். ஆனால், வேலை இல்லாமல் சொந்தக்காரங்க விசேஷங்களுக்குக் கூடப் போகமுடியாது.’ என்பதுதான் அது. இந்த பொன்மொழி எந்த அளவுக்கு உண்மை என்பதை நான் உணர்ந்துவிட்டேன்.

இவ்வளவுதான் என்னைப் பற்றிய தகவல்கள். இப்போது இந்த வலைப்பூவைப் பற்றி வருவோம்.

தமிழ் வழியில் படித்ததாலோ என்னவோ எனக்கு தமிழ் மீது கொஞ்சம் பற்று இருக்கிறது; உண்மையில் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கவேண்டியது, ஆனால் பலருக்கு இல்லாத ஒன்று. தமிழை யாராவது ஏதாவது தவறாக சொன்னால் என் மனம் புண்படும். சில சமயம் கோபப்பட்டும் இருக்கிறேன்.

ஒருநாள், தெரிந்தவர் ஒருவர் அவரது மகனுக்கு காமராஜர் பற்றி கட்டுரை எழுதித் தரச்சொன்னார். மூன்று வருட ஆங்கிலக்கல்விக்குப் பிறகு (BE) தமிழில் கட்டுரை எழுத சற்று சிரமமாகத்தான் இருந்தது. அப்போதுதான் உணர்ந்தேன், மெல்ல மெல்ல தமிழை மறந்துவருகிறேன் என்பதை. ஆக, ஆங்கிலமும் அவ்வளவாக வரவில்லை (பேச்சு வழக்கில் மட்டும்), தமிழும் மறந்துகொண்டே வருகிறது என்பதை உணர்ந்தேன்.

எனவே தமிழை மறக்கக் கூடாது என்பதற்காக 2011 ஆம் ஆண்டு இந்த வலைப் பூவைத் தொடங்கினேன். எனது முதல் பதிவைப் பாருங்களேன். சப்புன்னு இருக்கா? ஆம், அப்போது இந்த அளவுக்கு எனக்கு மொழி நடை இல்லை, கோர்வையாகவும் எழுதத் தெரியவில்லை. படிப்படியாகத்தான் முன்னேற்றம் கண்டேன். அந்த முன்னேற்றத்தின் அடையாளம்தான் இந்த நூறாவது பதிவு.

ஆரம்பக் காலக்கட்டத்தில் ஒரு குறிக்கோள் இல்லாததால் எப்போதாவது இடுகையிடுவேன். ஆனால், வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்தபோது மீண்டும் இணையத்திற்கு வந்தேன். அந்த நேரத்திலிருந்து (2012இல் இருந்து) இன்றுவரை இயங்குபவனாக தங்கள் தொடர்பில் இருக்கிறேன். இப்போது எனக்கு இருக்கும் ஒரே குறிக்கோள் ஓய்வு நேரங்களை ஆக்கப்பூர்வமாகவும் மற்றவர்களுக்குப் பயனுள்ளதாகவும் பயன்படுத்தவேண்டும் என்பதுதான்.

இந்த இடத்தில் ஒன்று நான் கூறியே ஆகவேண்டும். முதன்முதலில் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் விதியையும் மதியால் வெல்லலாம் என்னும் பதிவிற்கு பின்னூட்டம் கொடுத்தார். அவர் கொடுத்த ஊக்கம்தான் இன்றுவரை நான் பதிவிடக் காரணம் என மகிழ்வுடன் உங்கள் அனைவருக்கும் தெரிவிக்கிறேன். ஏனெனில் புதிய பதிவர்களுக்கு பின்னூட்டங்கள்தான் ஊக்கமளிக்கும். கடந்த ஆறு மாதங்களாகத்தான் இரண்டு மூன்று பேராவது பின்னூட்டமிடுகின்றனர். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தவறாமல் பின்னூட்டம் அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

எனக்கு இதைத் தவிர்த்து Rich Info Site என்னும் ஒரு தளமும் உள்ளது. அது என்னுடைய ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளத் தொடங்கப்பட்டது. என்னுடைய ஓய்வு நேரம் இந்த இரு தளங்களை நிர்வகிப்பதிலேயே கழிந்துவிடுகிறது. எனவே, மற்ற தளங்களுக்குச் சென்று அவர்களைப் பாராட்ட நேரம் போதவில்லை. ஒரு சில நேரங்களில் மட்டுமே முடிகிறது. இருந்தாலும் ஒரு நிரந்தர வேலைக் கிடைத்துவிட்டால் என்னுடைய வலைப் பூவை மேம்படுத்தவும் பல தளங்களுக்குச் சென்று பாராட்டவும் போதிய நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

சில முக்கியமான நன்கு வரவேற்பு பெற்ற பதிவுகள்

(படிக்காதவர்கள் இணைப்புகளைச் சொடுக்கி படிக்கவும்.)

 

இந்த நூறாவது பதிவிடும் நாளில் என்னை வாழ்த்தும் அனைத்து நெஞ்சங்களுக்கும், என் வலைப்பூ வளர உறுதுணையாக பக்கபலமாக இருந்த நல்ல உள்ளங்களுக்கும், பின்னூட்டம் அளித்து ஊக்குவிக்கும் நண்பர்களுக்கும் என் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

நண்பர்களாக இணைய

Subscribe
Notify of
help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
guest
14 Comments
Inline Feedbacks
View all comments
ஸ்கூல் பையன்
ஜூன் 8, 2014 7:04 காலை

மனம் தளர வேண்டாம், கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும் நண்பா… வாழ்த்துக்கள்….

‘தளிர்’ சுரேஷ்
ஜூன் 8, 2014 8:27 காலை

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்! விரைவில் நல்ல பணி கிடைக்க வேண்டுகிறேன்! நன்றி!

அம்பாளடியாள் வலைத்தளம்

ஊக்கமும் விடாமுயற்சியும் இருந்தால் வாழ்வில் நினைத்த காரியத்தை
வெற்றி கொள்ள முடியும் .மனம் தளராது சோர்வின்றி உழைப்பின் வாழ்வும் வளமும் சிறக்கவும் எழுத்தாற்றல் படைப்பாற்றல் ஓங்கவும் என் மனமார்த்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்விற்கு .

அம்பாளடியாள் வலைத்தளம்

ஊக்கமும் விடாமுயற்சியும் இருந்தால் வாழ்வில் நினைத்த காரியத்தை
வெற்றி கொள்ள முடியும் .மனம் தளராது சோர்வின்றி உழைப்பின் பயனால் தங்களின் வாழ்வும் வளமும் சிறக்கவும் எழுத்தாற்றல் படைப்பாற்றல் ஓங்கவும் என் மனமார்த்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்விற்கு .

kuppu sundaram
ஜூன் 8, 2014 8:54 காலை

விரைவில் நிரந்தர வேலை கிடைத்து எழுத்துப்பணி தொடர்ந்து,நூறு ஆயிரமாக வாழ்த்துகள்

துளசி கோபால்
ஜூன் 8, 2014 9:18 காலை

நூறு !!! இனிய பாராட்டுகள். இந்நூறு பலநூறாகப் பெருக வாழ்த்துகின்றேன்!!!

திண்டுக்கல் தனபாலன்
ஜூன் 8, 2014 1:19 மணி

முதலில் நன்றிகள் பல…

தங்களின் விவரத்தையும் அறிய முடிந்தது… நம்பிக்கை மட்டும் என்றும் இருக்கட்டும்…

தங்களின் எண்ணங்கள் சிறக்கவும் தொடரவும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்…

மற்றொரு தள முகவரிக்கு நன்றி…

Iniya
ஜூன் 8, 2014 1:32 மணி

நூறாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள் …! "பாகிஸ்தான் போகலாம் வீட்டு விசேஷங்களுக்கு போகமுடியாது"என்பது தங்கள் வேதனையை உணர்த்தியது என் மனதை வருத்தியது.

எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேற
ஏற்ற வேலையும் கைவசம் கிட்டிட
ஏற்றம்தரும் பலநூறுபடைப்புகள் படைத்து
என்றும் இன்பமாய் வாழ வாழ்த்துகிறேன் மனமார….!.

Jeevalingam Kasirajalingam
ஜூன் 9, 2014 7:48 காலை

முயற்சி, நம்பிக்கை
எம் இரு கண்களாயின்
வெற்றி வெகுதூரமில்லை!
தொடர வாழ்த்துகள்

visit http://ypvn.0hna.com/

வெங்கட் நாகராஜ்
ஜூன் 14, 2014 2:35 மணி

நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்…..

விரைவில் நல்ல வேலை கிடைக்கட்டும்……

ராஜா
ராஜா
ஏப்ரல் 22, 2015 2:50 மணி

அன்பு தம்பிக்கு என் வாழ்த்துகழும் வணக்கங்களும்!, வேலை என்பது வேறு ஒருவருடைய கனவுகளுக்கு நாம் பாடுபடுவது, அதற்கான் பரிசுதான் நம் ஊதியம். உங்கள் கனவு என்னவென்று தனிமையில் சிந்தியுங்கள்!, எவ்வளவு பேருக்கு மனதில் தோன்றும் எண்ணத்திற்க்கு எழுத்து வடிவம் கொடுக்க முடியும்! அந்த திறமை உங்களுக்கு இருக்கு. வேலைதேடலுக்கு பதிலாக வாய்ப்பை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபடுங்கள். உங்கள் கனவுகளுக்கு என் முன் கூட்டிய வாழ்த்துக்கள்!! ஜெய் ஹிந்த்!

chandraa
chandraa
ஜூன் 14, 2015 4:50 மணி

pursue vigorously to secure a good job best wishes… remember that great writers like sujathas nanjil nadhan mamian saavi vairamuthu pon mani and many others had a job first….pursue your literary talent by being in a job.

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.