நா நெகிழ் வாக்கியங்கள் பகுதி – 2 (Tamil Tongue Twisters Part-2)

நா நெகிழ் வாக்கியங்கள் பகுதி ஒன்றைப் படிக்க இங்குச் சொடுக்கவும்.

dogs-twisting-tongue

Credit:Flickr

மேலும் ஒரு நா நெகிழ் பயிற்சி. நானே யோசித்துத் தயாரித்தது. என்னுடைய ஒவ்வொரு பதிவிலும் இயன்ற அளவு சமூக சீர்திருத்தக் கருத்துக்களை கூற விழைகிறேன். அவ்வண்ணமே, இங்கும் ஒவ்வொரு வாக்கியத்திலும் கருத்துக்கள் பொதிந்துள்ளன. அவைகள் புரியவில்லையென்றாலோ அல்லது முரண்பாடாகத் தெரிந்தாலோ என்னிடம் வினவ அன்பு அழைப்பு விடுக்கிறேன்.

  1. கேடு கெட்ட உறவோடு கெட்ட மட்ட கருவாடு, கொண்டு வரும் வறுவோடு எடுக்க வைக்கும் திருவோடு.
  2. எக்கினாலும் விக்கினாலும் ஏசும் இந்த உலகம், சொக்கினாலும் துக்கினாலும் பழிக்கும் பாவ உலகம், நிமிர்ந்து நேர்மை பூண்டு செல்வோம் பரலோகம்.
  3. நேசம் இல்லா இடத்திலே நாசம் என்றும் உள்ளதப்பா, ஆசையில்லா இல்லா இடத்திலே பூசையொன்றும் இல்லையப்பா, பாசம் உள்ள இடத்தினிலே வாசம் கொள்ளல் நல்லதப்பா.
  4. கட முட மாட்டு வண்டி தட தட வென உருண்டு போயி மட மட வெனக் கழன்றதென்றால் பட பட வென நெஞ்சம் பதறாதோ.
  5. கஞ்சி ஊத்த ஆள் இல்லன்னாலும் கட்சி கட்ட ஆளு வேணும்னு கெஞ்சிப் பேச வாஞ்சித்த வஞ்சியை மிஞ்சிய பிஞ்சுநெஞ்சு கொஞ்சியழைத்தது.
  6. உனக்கும் எனக்கும், பிறர்க்கும் உனக்கும், எனக்கும் பிறர்க்கும், அவர்க்கும் நமக்கும், இவர்க்கும் அவர்க்கும், பெரிதான பிரதான ஒற்றுமை மானிடப் பிறவியே.
  7. தள தள மாமியின் வழ கொழ பேச்சைக் கேட்டுத் தடபுடலாய் செலவு செய்து வழக்கத்துக்கு மாறான பழக்கத்தைப் புழக்கத்தில் கொண்டு வாழும் வாழ்க்கை வழுவியும் வேண்டாமே.
  8. குட்டக் குட்டக் குனியாதே, கட்டுப் பட்டுத் தொலையாதே. திட்டவட்ட நெஞ்சுடனே விட்டுக் கொடுத்து வாழ்ந்து வெட்ட வெட்டத் துளிர்த்திடு.
  9. தொடை தட்டி சவால் விட்டு, வடை சுட்டுக் கடை போட்டு விற்று, தடை நீங்க விடை கிடைத்து, புடை சூழ குடை பிடித்து நடைபோட்டு போனபோது, பீடை மோதப் பாடையில் சென்றான்.
  10. வட்டம் பெரிய வட்டம், கட்டம் சிறிய கட்டம். கட்டம் போடுது கொட்டம், வட்டம் போடுது சட்டம். வட்டம் இல்லை கட்டம், கட்டம் இல்லை வட்டம். வட்டம் வட்டம், கட்டம் கட்டம், இது திட்டவட்டம்.

தொடரும்…

10 Comments

  1. வெங்கட் நாகராஜ் ஏப்ரல் 12, 2014
  2. Jeevalingam Kasirajalingam ஏப்ரல் 12, 2014
  3. Iniya ஏப்ரல் 14, 2014

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.