தமிழ்படம் பாக்கிறீங்களா?

குறிப்பு: இன்று தமிழ் சினிமாவில் எப்படி அரைத்த மாவையே அரைக்கிறார்கள், எப்படி மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்பது போன்ற பல கருத்துக்களைப் பதிய இந்தக் கற்பனை தொடர் கதையை எழுதுகிறேன். இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல.

Tamil-Actors

“Sir, ரொம்ப நாளா ஒருத்தர் உங்ககிட்ட கத சொல்லணும்னு வந்திட்டு இருந்தாருல்லா!… அவரு இன்னைக்கு வந்திருக்காரு.” என்று நடிகர் flop star இன் P.A மாணிக்கம் அவரிடம் கேட்டார்.

“இல்லப்பா. இன்னைக்கு ஏகப்பட்ட shooting இருக்கு. நாளைக்கு நம்ம free தானே? அவர நம்ம வீட்டுக்கே வரச் சொல்லிடு.” என்றார் பல படங்கள் நடித்து, எந்த ஒரு படமும் வெற்றியடையாவிட்டாலும், ரசிகர்களின் கண்மூடித்தனமான ஆதரவினால், நாளுக்கு நாள் தன்னுடைய சம்பளத்தை உயர்த்திக்கொள்ளும் flop star.

“சரி sir.” என்றார், மாணிக்கம்.

அடுத்தநாள் flop star வீட்டில்,

“வணக்கம் sir” என்று flop star ஐ வணங்கினார் ஒருவர்.

“ம்… வாங்க. நீங்கதானா நேத்தி வந்தது? பரவாயில்லையே! காலையிலே வந்துட்டீங்க? உங்க பேரு என்ன?.”

“sir, என் பேரு ஜான்சன். நவரத்தினம் sir கிட்ட assistant ஆக இருக்கேன்.”

“அப்படியா! சொல்லுங்க. நீங்க என்ன கத வச்சிருக்கீங்க?”

“என்கிட்ட நிறைய கத இருக்கு sir.”

“இந்தப்பா coffee” என்று ஜான்சனுக்கு வந்து கொடுத்தார் மல்லிகா.

“இதுதான் எங்க அம்மா.”

“வணக்கம்மா.”

“ம். வணக்கம்.” என்று கூறி உள்ளே சென்றார்.

Flop star தொடர்ந்தார். “நிறைய கத இருப்பது முக்கியமில்ல. நல்ல கதையா இருக்கணும். வித்தியாசமாவும் இருக்கணும்.”

“எல்லா கதையுமே வித்தியாசமானதுதான் sir.”

“நீங்க கதைய சொல்லுங்க. நான் சொல்றேன், அது எப்படீன்னு.”

“எந்த மாதிரியான கத sir வேணும்? காதல் கதையா action கதையா?”

“தம்பி, என்னோட படம் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதா ரசிகர்கள் சொல்றாங்க. இந்தப் படமாவது…. நல்லா இருக்குமா….ன்னு எல்லாரும் வந்து ஏமாறுவதா சொல்றாங்க. அதனால அடுத்த படம் முற்றிலும் மாறுபட்டதா இருக்கணும். அந்த மாதிரி ஒரு கதைய சொல்லுங்க. மொதல்ல காதல் கதைய சொல்லுங்க.”

“சரிங்க sir. Sir, நம்ம கதையோட hero ஒரு பிச்சக்காரன்.”

“என்னது பிச்சக்காரனா? ஆரம்பமே வித்தியாசமா இருக்கே! மேல சொல்லுங்க.”

“Sir, மத்த படங்கள்ல hero, வேல இல்லாம சும்மா சுத்திட்டு இருப்பாரு. ஆனா, நம்ம hero பிச்ச எடுத்துப் பொழைக்கிறாரு.”

“ஏன்? ஏதாவது கூலி வேல செஞ்சி பொழைக்கலாமே?”

“அங்கதான் sir நம்ம hero நிக்கறான். அம்மா சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு தன்னோட குலத்தொழில காப்பாத்திட்டு வரான்.”

“இது கொஞ்சம் வித்தியாசமாதான் இருக்கு. அப்புறம்?”

“Hero வுக்கு ஒரு introduction song கூட வச்சிருக்கேன் sir.”

“என்ன பாட்டு அது?”

“அந்த அரபிக் கடலோரம்

ஒரு வீட்டைக் கண்டேனே

அந்த வீட்டின் கதவைத்

தட்டித் தட்டி பிச்சை கேட்டேனே

ஹம்மா ஹம்மா பிச்ச போடு யம்மா

ஹே! ஹம்மா ஹம்மா பிச்ச போடு யம்மா”

“பாட்டு நல்லா இருக்கே. Compose ஏ பண்ணிட்டீங்களே!”

“ஆமாம், sir. பாரிஸ் சுபராஜ் என்னோட நண்பந்தான்.”

“ஓ! அப்படியா! சரி, நீங்க கதைக்கு வாங்க.”

“ஒருநாள் hero ஒரு வீட்ல பிச்ச கேக்கும்போது ஒரு பொண்ணு வீட்டு உள்ள இருந்து பிச்ச போட வரா sir. அவதான் நம்ம கதையோட நாயகி.

“ம்… என்ன? அவள பாத்த ஒடனே hero வுக்கு காதல் வந்திடுச்சா?”

“இல்ல sir, எல்லா படத்திலும் அப்படித்தான் சொல்லுவாங்க. நம்ம கத வித்தியமானது sir. Heroin வெளிய வந்ததும் ஒரு 5 ரூபா பிச்ச போடுறா. பின், hero கிழிஞ்சத்துணி போட்டிருப்பதப் பார்த்திட்டு, உள்ள போயி தன்னோட அண்ணன் துணி ஒன்னு எடுத்துட்டு வந்து கொடுக்கறா. அங்கதான் sir நம்ம hero வுக்கு காதல் வருது.”

“என்னங்க! இப்படிக் கூடவா காதல் வரும்?”

“என்ன sir, எழவு வீட்லலாம் காதல் வருது. இப்படி இருந்தா என்ன sir தப்பு? Logic எல்லாம் பாத்தா படம் ஓடாது sir. ஏதாவது வித்தியாசமா இருந்தாதான் மக்கள் விரும்புவாங்க.”

“நீங்க சொல்றதும் சரிதான். ஆனா எதுக்காகக் காதல் வருதுன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.”

“Sir, அந்தப் பிச்சக்காரன் ஊர்ல எத்தன வீட்டுக்குப் போயிருப்பான். ஆனா யாருக்காவது அவன் கிழிஞ்ச துணி போட்டிருக்கானே, அவன் மானத்த காப்பத்துவோம்ன்னு தோணுச்சா? அதனால, மனிதாபிமானமுள்ள அந்தப் பொண்ண பாத்ததும் நம்ம hero வுக்கு காதல் வந்திடுச்சி.”

“சரிதாங்க. ஒரு சில பொண்ணுங்களுக்கு நல்லா செலவு பண்றவன் மேல காதல் வருவதா காட்டுறாங்க. இது கொஞ்சம் பரவாயில்ல.”

“அவங்க எல்லாம் பொய்யா நடிக்கிறவங்க sir. செலவு பண்ணினா காதல் பண்ணுவாங்க. இல்லன்னா வேற நல்லா செலவு பண்ற பையன மாத்திக்குவாங்க. ஆனா நம்ம hero வோட காதல் உண்மையானது sir.”

“சரி, நீங்க மேல சொல்லுங்க.”

“நம்ம hero, அவன் பிச்சைக்காரன் என்பதால, தன்னோட காதல மறைக்கிறான். ஆனா, அந்தப் பொண்ண அடிக்கடி எதேர்ச்சையா பார்க்க வேண்டியதாயிடுச்சி. பாத்தபோதெல்லாம் அந்தப் பொண்ணு கரிசனையா பேசனதால இவன் காதல் முத்திடுச்சி. ஒரு நாள் தன் காதல அந்தப் பொண்ணுகிட்ட சொல்றான். ஆனா, நம்ம heroin கடுப்பாயிடறா. எந்தப் பொண்ணுக்குதான் ஒரு பிச்சகாரன பிடிக்கும்? அவன அசிங்க அசிங்கமா கேட்டுட்டு தான் ஒரு பெரிய பணக்காரனதான் கல்யாணம் பண்ணிக்குவான்னு சொல்லிட்டா. நம்ம hero, தான் பணக்காரனா ஆனா கல்யாணம் பண்ணிக்குவாளான்னு கேட்கறான். அவள் பாப்போம்ன்னு சொல்றா. உடனே நம்ம hero ஒரு பெரிய பணக்காரனா ஆகணும்னு களத்துல எறங்கறாரு.”

“என்னங்க?… அம்மாவுக்குச் செஞ்சி கொடுத்த சத்தியம் என்னாச்சி?”

“Sir, காதல் வந்தா அம்மாவே கண்ணுக்குத் தெரிய மாட்டாங்க. இதுல சத்தியம் எந்த மூலைக்கு?”

“ரொம்ப சரியா சொன்னீங்க. நம்ம நாட்லதான் காதலுக்கு கண்ணில்லையாச்சே!”

“அது மட்டும் இல்ல sir. காதல் வந்தா பணக்காரன் ஏழையவான், ஏழை பணக்காரனாவான். சரி நம்ம கதைக்கு வருவோம். அப்புறம் அவன் ஒரே பாட்டுல பணக்காரனா ஆகறான் sir.”

“என்னப்பா எல்லா படத்துலயும் ஒரே பாட்டுல தானே பணக்காரனா ஆவறதா காமிக்கராங்க. நம்ம ஏதாவது வித்தியாசமா காமிக்கலாமே.”

“சரி sir. அப்ப ரெண்டு பாட்டுல பணக்காரனா ஆவதா வச்சிக்கலாம். அதுக்கப்புறம் கதாநாயகி கிட்ட போயி திரும்பவும் அவனோட காதல சொல்றான். அவ, தான் ஒரு வார்த்த சொன்னதால பெரிய பணக்காரன் ஆயிட்டானேனு அவன புடுச்சு போயி ஏத்துக்கறா. அப்ப நம்ம ஒரு duet song வாக்கிறோம்.”

“அது என்ன பாட்டு?”

“போனியா போனியா பிச்செடுக்க போனியா

பிச்சையில் நீ எந்த வகை கூறு

பிச்சையிலே ரண்டு வகை

ராப்பிச்சை பகல்பிச்சை

ரண்டில் நீ எந்த வகை கூறு

சில நாள் ராப்பிச்சை உண்டு

சில நாள் பகல்பிச்சை உண்டு

தேவை ஏற்படும்போது

ரண்டும் எடுப்பது நன்று.”

“பாட்டு நல்லாதான் இருக்கு. சரி, கதையோட முடிவு என்ன?”

“எல்லாம் சுப முடிவுதான் sir. பல பிரச்சனைகள எதிர்த்து அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கறதுதான் மீதி கத sir.”

“கத பரவாயில்ல. படத்துக்கு என்ன பேர் வக்கபோறீங்க ?

“Sir நம்ம படத்தோட பேரு ‘இது பிச்சைக்காரன் காதல்’.”

“படத்தோட தலைப்பு அருமையா இருக்கு.”

“Sir, என்கிட்ட இன்னும் நிறைய கத இருக்கு sir.”

“ம்.. சொல்லுங்க.”

“அடுத்த கதை பேரு ‘ஆண்கள் பெண்கள்’.”

“அது என்னங்க ஆண்கள் பெண்கள்?”

“அதாவது sir, கத முழுசும் public toilet யைச் சுத்தியே நடக்குது. அதான் sir.”

“என்னது? Public toilet அ வச்சி ஒரு கதையா?”

“ஆமாம் sir. நம்ம hero பொழப்பத் தேடி வேலூர் bus stand ல வந்து எறங்கறான். அங்க இருக்கற public toilet அ நம்ம heroin குத்தகைக்கு எடுத்து நடத்திவரா. அங்க நம்ம hero உச்சா போயிட்டு ரெண்டு ரூபா சில்லர இல்லாததால அம்பது ரூபா கொடுக்கறாரு. Heroin சில்லரயா இருந்தா கொடுங்க, இல்லன்னா பரவாயில்லன்னு சொல்லிடறாங்க. அதனால hero வுக்கு அவள புடிச்சிடுது.”

“இங்கியும் காதலா? என்ன கர்மம்டா.”

“Sir, தேசிய விருது வாங்குவதற்காக எடுக்கப்போற படம். இப்படிதான் இருக்கும்.”

“ஆமாம், தேசிய விருது எந்த நல்ல படத்துக்குக் கொடுக்கறாங்க! எல்லாத்திலும் அரசியல். ம்… நீங்க சொல்லுங்க.”

“நம்ம hero வுக்கு கொளுத்து வேல கெடச்சிடுது. அப்புறம் அடிக்கடி அந்த public toilet க்கு வந்து தன்னோட காதல வளக்கறான். ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்பறாங்க.”

“காதல வளக்க toilet க்கு வரானா?”

“Sir, college படிக்கற பொண்ணா இருந்தா அங்க போலாம். ஆனா நம்ம heroin toilet அ குத்தகைக்கு எடுத்திருக்கா. அப்ப toilet க்கு தானே போக முடியும்.”

“நீங்க சொல்றதும் சரிதான். மேல சொல்லுங்க.”

“Heroin, அந்த வேலையில ரொம்ப கஷ்டப்படறா. வரவங்க போறவங்க எல்லாம் அவள ஒரு மாதிரி பாக்கறாங்க. அதனால பலப் பிரச்சினைகளை heroin சந்திக்கறா. அந்தப் பிரச்சினைகளையெல்லாம் hero சமாளிக்கறாரு. பிறகு, அவள அந்தத் தொழிலிலிருந்து வெளிய வரச் சொல்லிட்டு அவளுக்கும் கொளுத்து வேல வாங்கி தராரு. அப்புறம் ரெண்டு பேரும் கலியாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழறாங்க. இதான் sir நம்ம ரண்டாவது கத.”

“இந்தக் கத எனக்கு அவ்வளவா புடிக்கல. வேற ஏதாவது வித்தியாசமா கத சொல்லுங்களேன்.”

“Sir, ரொம்ப வித்தியாசமான காதல் கத இருக்கு. அத சொல்லட்டுமா?”

“ம்… சொல்லுங்க.”

“ஒரு வயசுப்பொண்ணும் ஒரு வயசுப்பையனும் காதலிக்கறாங்க.”

“இதுல என்ன வித்தியாசம்? எல்லா படத்திலும் இதத்தான காட்டறாங்க!”

“Sir, நான் சொன்னது 1 வயசுப் பொண்ணும் 1 வயசுப் பையனும் காதலிக்கறாங்கன்னு.”

“அப்ப. கொழந்தைங்க காதலா? இதுல எனக்கு என்ன வேல?”

“Sir, அந்தக் கொழந்தையே நீங்கதான் sir.”

“ஹா…ஹா…ஹா….”

“Sir, படத்தோட பேரு ‘ஒரு வயதினிலே’.”

“ஒங்களுக்கு பசிக்குதுன்னு நெனைக்கறேன். அதான் இந்த மாதிரி கத சொல்றீங்க. சரி வாங்க, breakfast சாப்டுட்டு வரலாம். இன்னைக்கு முழுசும் நான் free. நீங்க எல்லாக் கதையையும் சொல்லுங்க. கடைசியா முடிவு பண்ணிக்கலாம்.”

என்று flop star கூற அனைவரும் காலை உணவு சாப்பிடச் சென்றனர்.

தொடரும்….

5 Comments

  1. Ramani S மார்ச் 19, 2014
  2. Ramani S மார்ச் 19, 2014

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.