நாடு போற்றும் நலத் திட்டங்களை வகுத்தவர்
கல்வி என்ற கனவை நனவாக்கியவர்
அணைகள் கட்டி விவசாய நெஞ்சை நிமிர்த்தியவர்
தமிழகத்தை செழிக்க வைத்த ‘திகம்பரர்’
தமிழகத்தை மாநிலங்களின் முன்னோடியாக்கியவர்
வெள்ளை கதராடையணிந்த வெள்ளை உள்ளத்தவர்
அண்ணல் அன்புநேசர், கர்மவீரர் காமராசர்
சுகங்களைத் துறந்து, பிரம்மச்சாரியாக இருந்து
சொந்த வாழ்வை மறந்து மக்களை மனதில் சுமந்து
மக்களுக்காக வாழ்ந்த அரசியல் ‘பீஷ்மர்’
அனுபவ அறிவுக்களஞ்சியம் அவர்
மனித நேயம் கொண்ட பாசமிகு பண்பாளர்
சொந்தவீடே இல்லா தமிழகத்தின் சொந்தக்காரர்
பதினாறு வயதினிலே வந்த தேச பக்தி-அவரை
கொண்டு சென்றதே புகழ் ஏணியின் உச்சி
ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அறிவாளி
ஆண்டவன் அருள் பெற்ற நல் படைப்பாளி
நாட்டிற்காக உழைத்த நல் உழைப்பாளி
நுட்ப சிந்தனையுள்ள கூர்மையான அறிவாளி
கருப்புத்தங்கம்! தமிழகத்தின் காந்தி! காமராசர்!
அனைவருக்கும் காமராஜர் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
சிறப்பித்தமைக்கு நன்றி… வாழ்த்துக்கள்…
(தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்…)
இன்றைய பகிர்வும் குருவைப் பற்றி :
நேரம் கிடைப்பின் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Story-Student.html