இந்தக் கட்டுரையில் நாம் அறிந்த பழங்களின் பட்டியலையும் கேள்விப்படாத அழிந்துபோகும் அரிய வகை பழங்களையும் பார்க்கப்போகிறோம்.
நாம் அறிந்த பழங்களின் பட்டியல்
முக்கனிகள்
மா, பலா மற்றும் வாழை.
பிற பழங்கள்
- ஆப்பிள்
- நேந்திரம் பழம்
- சிறுகாய்(Berry)
- சீத்தாப்பழம்
- பேரீச்சம் பழம்
- சீமை இலந்தைப்பழம்
- அத்திப்பழம்
- நாரத்தங்காய்
- திராட்சைப்பழம்
- வெள்ளரிப்பழம்
- கொய்யாப்பழம்
- எலுமிச்சை
- கம்பளிப்பூச்சி பழம்(Mulberry)
- முலாம் பழம்
- கிச்சிலிப்பழம்(orange)
- பேரிக்காய்
- தர்பூசணி
- அன்னாசி
- மாதுளை
- பப்பாளி
- நாவற்பழம்
- ஜம்பு நாவல்
- கிடாரங்காய்(shaddock)
- தக்காளி
- விளாம்பழம்
- ஆல்பாகாடா பழம்(Prune)
- ப்ளம் பழம்(plum)
- பீச் பழம்(peach)
- லிச்சி பழம்(lychee fruit)
- சிவந்த பழம்(strawberry)
- வெண்ணைப் பழம் (Butter Fruit)
- சப்போட்டா
- முந்திரிப்பழம்
- அரை நெல்லி
- முழு நெல்லி
- அத்திப்பழம்
- புளியம் பழம்
- கருவேப்பிலைப்பழம்
- தூதுவேளைப்பழம்
- கமலா
- சாத்துக்குடி
- வில்வம் பழம்
- கொளஞ்சி
- நட்சத்திரப் பழம் (Star Fruit)
- Dragon Fruit
- Cherry Fruit
இப்படியாக அடிக்கிக் கொண்டே போகலாம்.
அழிந்துவரும் பழங்களின் பட்டியல்
கீழ் காணும் பழங்களில் ஒரு சில அழிந்தேவிட்டன. ஒரு சில அழியும் தருவாயில் உள்ளன. ஒரு சிலவற்றை நீங்கள் பார்த்தோ அல்லது கேள்விப்பட்டோ இருக்கலாம். ஆனால், கண்டிப்பாகச் சில பழங்கள் நீங்கள் கேள்வியே பட்டிராதவைகளாக இருக்கும். இந்தப் பழங்கள் பெரும்பாலும் முட்புதர் காடுகளில் வளரும்.
- நாட்டு இலந்தைப்பழம்
- குருவிப்பழம்
- தெரணிப்பழம்
- குத்துவீரன் பழம்
- தோட்டிவீரன் பழம்
- சிறு கிளா
- பெரு கிளா
- சொடலி
- சொத்து கிளா
- காரைப்பழம்
- சூரைப்பழம்
- நரிப்பழம்
- புலாப்பழம்
- இரும்புலி
- காட்டு சீத்தா
- வெள்ளைக்கோட்டான்
- காட்டத்தி
- பல்லுக்குச்சி பழம்
- ஞானாப்பழம்
- நரி வெளாம் பழம்
- உணிப்பழம்
- கிலுவைப்பழம்
- ஈச்சம் பழம்
- நுணா பழம்
- கோவைப்பழம்
- மணித்தக்காளி
- முட்டைத்தக்காளி
- சுக்கம் பழம்
- மலை சுக்கன்
- கள்ளிப்பழம்
- சப்பாத்திக்கள்ளி பழம்
- கொடுக்காபுளி காய்
இவை எனக்குத் தெரிந்தவை மட்டுமே. உங்களுக்குத் தெரிந்து அழிந்துகொண்டிருக்கும் பழங்களும் இருக்கலாம். மேலும் சில பழங்கள் முந்தய தலைமுறையினரோடு அழிந்துவிட்டன. இவற்றின் படங்களை இணைக்க எங்கள் ஊர் காட்டிற்கு புகைப்படம் எடுக்கச் சென்றிருந்தேன். அங்குக் காட்டைப் பார்த்து அதிர்ந்துபோனேன். பத்து வருடங்களுக்கு முன் நான் பார்த்த காடு அங்கு இல்லை.
நாங்கள் சிறு வயதில் இந்தப் பழங்களை மிக அதிக அளவில் பரித்துச் சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறோம். பலவகை பழங்களையும் வைத்துப் பந்தி பரிமாறி விளையாடியிருக்கிறோம். காலையில் செல்லும் நாங்கள் பழங்களையே உணவாக உண்டுவிட்டு, மாலையில் அவரவர் கூடைகளை பழங்களால் நிரப்பிக்கொண்டு வீடு திரும்பியிருக்கிறோம். ஆனால் தற்போது, தேடினாலும் அவை கிடைக்கவில்லை. காடுகளை அழித்து யுகலிப்டஸ் மரங்களை நட்டுவைத்திருந்தார்கள். எங்கெங்கோ தேடி சில பழங்கள் மற்றும் பழசெடிகளை படம் பிடித்து வந்துள்ளேன். அவற்றைக் கீழே இணைத்துள்ளேன்.
இவற்றையெல்லாம் விட ஒரு பழம் இருக்கிறது. அது அவ்வளவு அழகாக இருக்கும். பார்க்கும்போது நம் கண்களைப் பறிக்கும் அழகு வாய்ந்தது. ஆனால், அது இருப்பதே வீண். அதுதான் எட்டிப்பழம்.
“எட்டிப் பழுத்தால் என்ன? ஈயாதார் வாழ்ந்தால் என்ன?” என்பது பழமொழி. அதாவது எட்டி பழுப்பதும், பிறருக்கு சிறிதுகூட உதவாமல் கருமித்தனமாக இருப்பவர்கள் உலகில் வாழ்வதும் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. மாறாக, அது உலகிற்கு கெடுதல்தான். ஏனென்றால், எட்டிப்பழத்தை சாப்பிட்டால் மறுகணமே இறந்துவிடுவோம். இந்தப் பழத்தைப் புகைப்படம் எடுக்கலாம் என்று காடு முழுவதும் அலைந்துப் பார்த்தேன். நான் எடுத்த முயற்சி வீணாய்ப்போனது.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
Very useful, almost 90% of the fruit names I am hearing first time… Wonderful effort. Thanks
தங்கள் அன்பான பாராட்டுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.
உம்ை போன்ற. இயற்கை. ஆர்வலர்களின். முயற்சிகளை. கண்டு மெய் சிலிர்ிறேன்
Paragraph writing is also a excitement, if you be acquainted with then you can write otherwise it is difficult to
write.
பழங்களின் படத்தில் பெயரை எழுதியிருந்தால் பயன்படும் ஐயா ஆவண செய்ங்கள் 😆