மகாத்மா காந்தி – கவிதை

mahatma gandhi

அடிமையைப் போக்க வந்த வாய்மையே!

அன்புவழி காட்டித் தந்த அற நெறியே!

சாந்தமே உருவான சத்தியமே!

காந்தத்தை பெயராய்க் கொண்டவரே!

சீலம் சிறிதும் குறையாத எளியவரே!

மாந்தர்கள் போற்றும் நல்லவரே! – எம்

மனதில் மிடுக்காய் என்றும் உள்ளவரே!

சற்றும் நேர்மை பிறழா வலியவரே!

தியாக வாழ்க்கை வாழ்ந்தவரே!

திருநாட்டின் சிறையிருப்பை ஒழித்தவரே!

எங்களின் மனம் விரும்பும் கரும்பே!

எளிய உருவம் கொண்ட இரும்பே!

உலகம் வியக்க வாழ்ந்த சிகரமே!

உலகோர் போற்றும் நல் உத்தமரே!

மகாத்மாவே எங்களின் ஜீவாத்மாவே!

உம்மை மறவோம் எந்நாளுமே!

2 Comments

  1. இராஜராஜேஸ்வரி ஜனவரி 14, 2013

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.