“மீனா! மீனா! எங்க இருக்க?” மீனாவை பார்க்க வந்த கமலா கூப்பிட்டாள்.
“இங்கதான் இருக்கேன்.”
இருவரும் நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளித் தோழிகள்.
“நான் ஒரு பாட்டு புதுசா கத்துட்டு வந்திருக்கேன்.” கமலா கூறினாள்.
தனக்கும் சொல்லித் தரும்படி மீனா கேட்டுக்கொண்டாள்.
பாட ஆரம்பித்தாள் கமலா.
“ஏய்! என்னாடி? எங்கம்மாவ குள்ளிங்கர?”
“இல்லடி, சும்மா பாட்டுதான்!”
இப்படியாக அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்தது.
பிறகு அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள்.
அந்த வீட்டிற்கு சென்றிருந்த எனக்கு அவற்றைப் பார்த்து எனது சிறிய வயது ஞாபகம் வந்தது. சின்ன வயசுல நான் கூட என் நண்பர்களோடு பாட்டு பாடி விளையாடுவேன். அவர்களைப் பார்த்து அப்படியே நான் என் நண்பர்களுடன் சிறு வயதில் விளையாடுவதுபோல் கற்பனை செய்து கொண்டேன்.
அந்தச் சிறு வயது பருவமே பருவம். அந்தக் கள்ளம் கபடம் அற்ற வயதில் எந்த ஒரு வாழ்கையின் சுமைகளும் இல்லாமல் பாடி, ஆடி மற்றும் விளையாடுவது என்ன ஒரு மகிழ்ச்சி தெரியுமா?
பெரியவர்களானால் எவ்வளவு பிரச்சினைகள். நமக்குள் பொறாமை, போட்டி, பிறருக்கு குழி பறிப்பது, வாழ்க்கைச் சுமை மற்றும் எண்ணற்ற கஷ்டங்கள். இதையெல்லாம் பார்க்கும்போது ‘குழந்தைகளாகவே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று தோன்றுகிறது.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
மிக அழகான பாட்டும்! சிறப்பான கருத்தும்! நல்ல பகிர்வுக்கு நன்றிகள்!
நல்ல கருத்துக்கள்… தொடருங்கள் உங்கள் சிந்தனையை.. வாழ்த்துக்கள் ! நன்றி..