ஏன் நாம் குழந்தைகளாகவே இருக்கக் கூடாது

children

“மீனா! மீனா! எங்க இருக்க?” மீனாவை பார்க்க வந்த கமலா கூப்பிட்டாள்.

“இங்கதான் இருக்கேன்.”

இருவரும் நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளித் தோழிகள்.

“நான் ஒரு பாட்டு புதுசா கத்துட்டு வந்திருக்கேன்.” கமலா கூறினாள்.

தனக்கும் சொல்லித் தரும்படி மீனா கேட்டுக்கொண்டாள்.

பாட ஆரம்பித்தாள் கமலா.

ஐஸ்! ஐஸ்! பள்ளிக்கூடம்
அத்த வீட்டுக்குப் போனேன்
பழஞ்சோறு போட்டாங்க
வேணாம்னு வெளிய வந்தேன்
வெளியெல்லாம் பாம்பு
பாம்ப்படிக்க குச்சியெடுத்தேன்
குச்சியெல்லாம் சேறு
குச்சி கழுவ ஆத்துக்குப் போனேன்
ஆத்தெல்லாம் மீனு
மீனு புடிக்க வலையெடுத்தேன்
வலையெல்லாம் ஓட்ட
ஓட்டய தைக்க ஊசி எடுத்தேன்
ஊசியெல்லாம் வெள்ளி
வெள்ளியம்மா வெள்ளி
ஒங்கம்மா குள்ளி.

“ஏய்! என்னாடி? எங்கம்மாவ குள்ளிங்கர?”

“இல்லடி, சும்மா பாட்டுதான்!”

இப்படியாக அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்தது.

பிறகு அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள்.

அந்த வீட்டிற்கு சென்றிருந்த எனக்கு அவற்றைப் பார்த்து எனது சிறிய வயது ஞாபகம் வந்தது. சின்ன வயசுல நான் கூட என் நண்பர்களோடு பாட்டு பாடி விளையாடுவேன். அவர்களைப் பார்த்து அப்படியே நான் என் நண்பர்களுடன் சிறு வயதில் விளையாடுவதுபோல் கற்பனை செய்து கொண்டேன்.

அந்தச் சிறு வயது பருவமே பருவம். அந்தக் கள்ளம் கபடம் அற்ற வயதில் எந்த ஒரு வாழ்கையின் சுமைகளும் இல்லாமல் பாடி, ஆடி மற்றும் விளையாடுவது என்ன ஒரு மகிழ்ச்சி தெரியுமா?

பெரியவர்களானால் எவ்வளவு பிரச்சினைகள். நமக்குள் பொறாமை, போட்டி, பிறருக்கு குழி பறிப்பது, வாழ்க்கைச் சுமை மற்றும் எண்ணற்ற கஷ்டங்கள். இதையெல்லாம் பார்க்கும்போது ‘குழந்தைகளாகவே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று தோன்றுகிறது.

2 Comments

  1. s suresh ஜூலை 6, 2012

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.