“பாட்டி! பாட்டி! என்ன பண்ற?” என்று வரப்பு ஓரமாக ஏதோ பறித்துக் கொண்டிருந்த தனது பாட்டியைப் பார்த்து கேட்டான் சிறுவன் மணி.
“ஆவாரந் தழைப் பறிக்கிறேன்டா செல்லம்” என்றார் பாட்டி.
“எதுக்கு?” வினவினான் மணி.
“உன் கூட்டாளி சுமிதாவுக்கு கையில அடிபட்டு கட்டு போட்டாங்கல்ல?” – பாட்டி கேட்டார்.
“ஆமாம்” – மணி.
“கைய அசைக்காம அப்படியே வச்சிருந்ததால இப்ப கைய மடக்கவே முடியலையாம். எலும்பு அப்படியே கூடிடுச்சி. அதான் அத சரிபண்ண இத பறிச்சி எடுத்துட்டு போறேன்.”
“இந்தத் தழை எப்படி சரிபண்ணும்?” வியப்புடன் கேட்டான் மணி.
“இத கையில நல்லா இறுக்கமா புடிசிக்கிட்டே இருக்கனும். அப்படி செஞ்சா தழையோட ஆவி பட்டு கை நரம்புகள் தளர்ச்சி கொடுக்கும். ஒரு பத்து பாஞ்சி நாளு செஞ்சி கைக்கு பயிற்சி தந்தால் கை விரைவில் சரியாகிடும்.”
“உண்மையவா?”
“ஆமாம். எனக்குக் கூட ஒரு தடவ இப்படி குணமாகியிருக்கு.”
“ஐயோ! இந்தத் தழைக்கு இவ்வளவு மகத்துவமா?” என்று ஆச்சரியப்பட்டான் மணி.
“ஆமாம்பா. சும்மாவா சொன்னாங்க ‘ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா’ அப்படினு!”
“ஏன் அப்படி சொல்றாங்க?”
“ஏன்னா ஆவாரை அவ்வளவு பயன்படுது. அதோட மகத்துவங்கள சொல்றேன் கேட்டுக்கோ.”
“சீக்காய் அரைக்க உதவுது. காலப்போக்குல சீக்காய் பயன்படுத்துறது கொறஞ்சிக்கிட்டே வருது. சீக்காய் முடி கொட்டுற பிரச்சினய கொறைக்குது.”
“ஆவாரை இலைய வச்சி எலும்புகளை வணக்கம்(flexibility) கொடுக்க வைக்கலாம். கட்டு போட்டதினால வரும் நரம்பு பிரச்சினைகளை குணப்படுத்தலாம்.”
“பூவ கொதிக்க வச்சி தேநீர் சாப்படலாம். பூ இதழ தெனமும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தா எலும்புகள் உறுதியாகும். அதோட ஆவார பூ கொழம்பும் வய்க்கலாம். நமது உடல்ல பல நோய்கள குணப்படுத்த உதவுது.”
“அதோட பயன் தெரிஞ்சு பயன்படுத்துறவங்களுக்கு சீக்கிரத்தில் சாவு வராது.”
“ஆமாம் பாட்டி, ‘ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா!’ அப்படினு சரியாத்தான் சொல்லியிருகுறாங்க” என்று மணி கூற இருவரும் வீட்டுக்கு நடையை கட்டினர்.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
Thank you a lot for giving everyone such a splendid chance to read
articles and blog posts from this web site.
Appreciate the recommendation. Will try it out.
Aѡsome site! Nice content. I am loving it!!