முன்னேர் போகும் வழியே பின்னேரும் போகும்

இந்த பழமொழி பொதுவாக சகோதர சகோதரிகளையோ அல்லது பெற்றோர் பிள்ளைகளையோ குறிக்கிறது.

வயலை உழும் போது ஏர்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லுகின்றன. வயலை செவ்வனே உழ முதல் ஏர் செல்லும் வழியே அனைத்தும் செல்லும்.

இதற்காகத்தான் முன்னோர்கள் உறவு முறைகளின் செய்கைகளைக் குறிக்க இந்த பழமொழியை பயன்படுத்தினர்.

அதாவது, அண்ணன் பொறியியல் படித்தால் தம்பியும் அதையே படிக்க விரும்புவான். இந்த நிகழ்வுகள்  பல குடும்பங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பெரியவர்கள் சொல்லும் கூற்றுகளில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

அதேபோல, பிள்ளைகள் பெற்றோர்களின் செயல்களைப் பின்பற்ற முயற்சிப்பார்கள். எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக (Role Model) இருக்க வேண்டும்.

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.